news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அம்பன்பொலவில் யாத்ரீகர்கள்  ஏற்றிச் சென்ற பஸ் கொள்கலன் மோதி இருவர் பலி -29 பேர் காயம்

10 Jul, 2023
இன்று அதிகாலை அம்பன்பொல பிரதேசத்தில் யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர். பாதெனிய – அனுராதபுரம் வீதியில் பாதெனிய மகா வித்தியாலயத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஆண் ஒருவரும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை அம்பன்பொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!