உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
பிரார்த்தனை
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
. இதே போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திரந்தார்.. பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் விரைவில் நலம் பெற்று நல்ல ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள், அவர் விரைவில் குணமடையட்டும் என்று குறிப்பிட்டிருந்தார்..
இவ்வாறு காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பிரார்த்தனை செய்வதாகவும், விரைவில் அவர் உடல்நலம் தேறி வரவேண்டும் என்றும் பதிவிட்டிருந்தனர்.
உருக்கம்
பின்னர், ஹீராபென் உடல் நலம் தேறி வருவதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பிரதமர் மோடியின் தாயார் காலாமானார்..
இந்த தகவலை பிரதமர் நரேந்திரமோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
அதில் "ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் உள்ளது. அம்மா... ஒரு துறவியின் பயணத்தை உள்ளடக்கிய மும்மூர்த்திகளை நான் எப்போதும் உங்களிடம் உணர்ந்தேன். ஒரு தன்னலமற்ற கர்மயோகி நீங்கள்.
மதிப்புகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுடையது" என பிரதமர் மோடி உருக்கமாக பதிவிட்டுள்ளார்...
ரத்தானது
எந்த ஒரு தேர்தல் என்றாலும், தவறாமல் வாக்களிக்க வந்துவிடுவார் ஹீராபென்.. சமீபத்தில் குஜராத்தில் 2வது கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோதுகூட, சக்கரநாற்காலியில் வந்து வாக்களித்துவிட்டு சென்றிருந்தார்.
. வாக்களிக்க வந்திருந்தபோது, பிரதமர் மோடி, ஹீராபென்னை சந்தித்து ஆசி பெற்றுவிட்டு சென்றிருந்தார்.
தாயார் மறைவைத் தொடர்ந்து குஜராத் விரைந்துள்ளார் பிரதமர் மோடி.. அந்தவகையில், மேற்கு வங்கத்தில் இன்று மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேற்கு வங்கத்தில் நடைபெறும் திட்டப்பணிகளில் காணொலி வாயிலாக பிரதமர் பங்கேற்பார் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!