வங்கக்கடலில் உருவாகும் புயல்: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை?
25 Oct, 2026
போயிங் விமானம்
ஏன் அனுமதி இல்லை?
ஒவ்வொரு விமான நிறுவனங்களுக்கும் நாடுகள் வெவ்வேறு விதமான அனுமதிகளை வழங்கியிருக்கும்.
அதாவது 'எங்கள் நாட்டிற்கு இந்த வகையான விமானம் தான் நுழைய வேண்டும்...', 'இப்படி டெயில் எண் கொண்டிருக்க வேண்டும்...' என விதிமுறைகள் விதிக்கப்படும்.
அப்படி கனடா நாடு ஏர் இந்தியாவிற்கு கொடுத்துள்ள அனுமதியின் படி, அந்த நாட்டிற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 777-300ER ரக விமானத்தை மட்டுமே இயக்க முடியும்.
ஆனால், நேற்று சென்றதோ, போயிங் 777-200LR ரக விமானம்.
எரிப்பொருள் வீண்
அதனால், மீண்டும் விமானம் யூ-டர்ன் போட்டு டெல்லியே திரும்பியிருக்கிறது. பின்னர், விமானிகள், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டிருக்கின்றனர்.
இன்று இந்தப் பயணிகளைப் போயிங் 777-300ER ரக விமானத்தில் கனடாவிற்கு அனுப்பியுள்ளனர்.
இடையில் பயணிகள் தங்க இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம்.
நேரம் மட்டும் தான் வீண் என்று பார்த்தால், நேற்று சென்ற போயிங் 777-200LR-க்கு ஒரு மணிநேரத்திற்கு 8 - 9 டன் எரிப்பொருள் தேவைப்படுமாம்.
இப்போது எரிப்பொருள் தட்டுப்பாடு இருக்கும் சூழலில் இப்படியொரு சம்பவம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!