இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
உலகின் மிக நீளமான கடற்புல் தாவரம்
"அதற்கான பதில் எங்களை ஆச்சர்யப்படுத்தியது. ஏனெனில், அது ஒரேயொரு தாவரம்தான்!" என, அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் ஜேன் எட்கெலோ தெரிவித்தார்.
"அவ்வளவுதான்! ஒரேயொரு தாவரம்தான் ஷார்க் பே கடற்கரையில் 180 கி.மீ. நீளத்திற்கு பரவியுள்ளது. உலகின் நீளமான தாவரமாக இது அறியப்படுகிறது" என அவர் தெரிவித்தார்.
அந்த கடற்கரை முழுதும் பல்வேறு பருவச்சூழலுக்கு ஏற்ப எதையும் தாங்கி வளரும் தன்மையாலும் இத்தாவரம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
"இத்தாவரம் எதையும் தாங்கி வளரக்கூடியதாக உள்ளது. எந்தவித வெப்பம், உப்புத்தன்மை மற்றும் மிக அதிகமான வெளிச்சம் என அனைத்து சூழல்களிலும் வளரக்கூடியது.
ஆனால், இந்த சூழ்நிலைகள் பெரும்பாலான தாவரங்களுக்கு மிகவும் அழுத்தம் தரக்கூடியதாக இருக்கும்" என, ஆராய்ச்சியாளர்களுள் ஒருவரான எலிசபெத் சின்க்ளேர் தெரிவித்தார்.
இந்த கடற்புல் இனம் ஒரு புல்வெளியாக ஆண்டுக்கு 35 செ.மீ. நீளம் வரை வளரும். அதனடிப்படையில்தான் தற்போது இவ்வளவு நீளத்திற்கு இத்தாவரம் வளர 4,500 ஆண்டுகள் ஆகியிருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!