news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அளுத்கமவில் 4 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இளம் தாய் உயிரிழப்பு !

17 Jul, 2023
பெம்முல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம - போகமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தொகுதியின் 4 ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (16) இரவு 11 மணியளவில் வீட்டின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சத்துரிக்கா மதுஷானி அபேரத்ன என பொலிஸார் தெரிவித்தனர். 4 ஆவது மாடியில் இருந்து விழுந்த மனைவியை கம்பஹா வைத்திசாலையில் கணவன் அனுமதித்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!