முன்னாள் நடிகையும் கடந்த ஆண்டின் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார், நேற்று பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்தார்.
லாக்டெளன் காரணமாக அவரது வீட்டிலேயே கிறிஸ்துவ முறைப்படி இந்தத் திருமணம் நடந்தது.
வனிதாவின் கணவர் பீட்டர் பால் சினிமாவில் விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநராகப் பணியாற்றிவருகிறார்.
வனிதா ஏற்கெனவே இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்தானவர். முதல் கணவருடன் ஒரு மகனும் இரண்டாவது கணவர் மூலம் இரண்டு மகள்களும் இருக்கிறார்கள். மகன் மட்டும் முதல் கணவருடன் இருக்கும் நிலையில், மகள்கள் வனிதாவுடன்தான் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான் மூன்றாவது திருமணம் குறித்து கிசுகிசுக்கப்பட்டு செய்தியை முதன்முதலாக விகடன் மூலமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் வனிதா.
தனக்குத் திருமணம் நடைபெற இருப்பது பற்றியும், கணவர் பீட்டர் பால் பற்றியும் அப்பேட்டியில் பேசியிருந்தார் வனிதா.
இந்நிலையில்தான் நேற்று மாலை இவர்கள் திருமணம் நடந்தது. வனிதா - பீட்டரின் நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தத் திருமண நிகழ்வில் சினிமாத்துறையில் இருந்து நடிகைகள் அம்பிகாவும், ரேகாவும் நேரில்சென்று வாழ்த்தியிருந்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!