பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்...
28 Oct, 2026
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் உருவாகியுள்ளது. ஈரான் அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயல்படும் சில புரட்சி படைகளின் 11 கப்பல்கள் அமெரிக்க கப்பகளுக்கு நெருக்கமாக உள்ளதாகவும், அமெரிக்க கப்பலின் பயணத்துக்கு நெருக்கடி ஏற்படுத்துவதுதான் திட்டம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்தே டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். ஆனால் இதற்கு பதில் அளித்திருக்கும் ஈரான் ராணுவ செய்தித்தொடர்பாளர், ''அமெரிக்கா மற்றவர்களை வம்புக்கு இழுப்பதை விட்டுவிட்டு அவர்கள் படையில் இருக்கும் வீரர்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற வேண்டும்,'' என கருத்து தெரிவித்திருக்கிறார். கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் அமெரிக்கா அதற்கு இடையிலும் வட கொரியாவை கண்காணிப்பது, சீனாவுடன் மோதுவது,ஈரானுக்கு எச்சரிக்கை விடுப்பது ஆகியவற்றை செய்து வருவது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.I have instructed the United States Navy to shoot down and destroy any and all Iranian gunboats if they harass our ships at sea.
— Donald J. Trump (@realDonaldTrump) April 22, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!