news@ilakkiyainfo.com

பிரிவுகள்

அவிசாவளையில் வாகன விபத்து - 3 பேர் உயிரிழப்பு

08 Feb, 2026
அவிசாவளை, தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான குறித்த கார் பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த காரில் 4 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!