இஸ்ரேலியத்-தேர்தல்-தலைமை-மாறினால்-கொள்கை-மாறுமா?
27 Oct, 2026
சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நால்வர் குழுவினர்
படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர் ஒருவர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறார் (கோப்புப்படம்)
பயணத்தின் வெவ்வேறு கட்டங்கள்
ஆக்ஸியம் 4 திட்டத்தின்படி, பூமியின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படுவதிலிருந்து தப்பிக்க (escape velocity) ஃபால்கான் 9 ராக்கெட் விநாடிக்கு 11.2 கி.மீ. வேகத்தில் பயணித்தால் தான் பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறி விண்வெளிக்குள் நுழைய முடியும். இந்த பாதை நேரானது அல்ல. அந்த பாதை ஓர் கூம்பு வெட்டு வடிவத்தில் (parabola) இருக்கும்.
புவியீர்ப்பு புலத்தைக் கடந்து பயணித்த பின், அந்த ராக்கெட்டில் உள்ள முதல் கட்ட உந்துகலன்கள் அதிலிருந்து பிரிந்து, இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கும்.
ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டதிலிருந்து ராக்கெட் இரண்டாம் கட்டத்தை அடைய சில நிமிடங்களே எடுக்கும். அங்கிருந்து ராக்கெட்டின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகும் என்கிறார், தி பிளானட்டரி சொசைட்டி ஆஃப் இந்தியாவின் இயக்குநர் ரகுநந்தன்.
முதல் கட்டத்தில் புவியீர்ப்பு விசையை தாண்டி பயணிக்க ராக்கெட்டுக்கு அதிகளவிலான எரிபொருள் தேவை. ஆனால், பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து பயணித்த பின், குறைந்த எரிபொருள் மூலமாகவே நீண்ட தொலைவு மிக வேகமாக பயணிப்பது சாத்தியம்.
ஃபால்கான் 9 ராக்கெட்டின் இரண்டாம் கட்ட செயல்பாடு என்பது சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்துவது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்து அதன் சுற்றுவட்டப் பாதையில் நுழைவதற்கு தேவையான வேகம் மற்றும் உயரத்தை அடைய வேண்டும்.
இதன்பின், அந்த ராக்கெட் பூமியை தொடர்ந்து சுற்றி, அதன் வேகம், திசை மற்றும் சுற்றுவட்டப் பாதையை மாற்றி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழையும்.
எனினும், இந்த முழு செயல்முறையையும் ராக்கெட்டில் உள்ள வழிகாட்டும் அமைப்பே கவனித்துக்கொள்ளும்.
இத்திட்டத்தின் தலைவர் பெக்கி விட்சன் மற்றும் பைலட் சுபான்ஷு சுக்லா ராக்கெட்டில் தங்கள் முன்பு உள்ள மானிட்டர்கள் மூலம் இதை கண்காணித்து, அது சரியான திசையில் பயணிக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள்.
சில நிமிடங்களில் முதல் கட்டம் நிறைவடைந்துவிட்டது என எடுத்துக்கொண்டால், இரண்டாம் கட்டம் நிறைவடைய 23 முதல் 25 மணி நேரமாகும் என ரகுநந்தன் கூறுகிறார்.
கடினமான கட்டம்
நாசாவால் வெளியிடப்பட்ட சர்வதேச விண்வெளி நிலைய படங்கள், விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் மிக குறைவான வேகத்தில் நகர்வது போன்று காட்டுகின்றன.
ஆனால், உண்மையில் அது மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் நகர்கிறது. அதாவது, ஃபால்கான் 9 ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைய (docking) ஒரே வேகத்திலும் ஒரே திசையிலும் பயணிக்க வேண்டும். இரண்டும் ஒன்றன்பின் ஒன்றாக பயணிக்கும்.
பயணம் தொடங்கி 25 மணிநேரம் கழித்து, டிராகன் விண்கலம் அதே வேகத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி செல்லும்.
அதன்பின், மெதுவாக வேகத்தை அதிகரித்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் விண்கலம் இணையும் செயல்முறை தொடங்கும். அந்த சமயத்தில், இரண்டும் விண்வெளியில் நிலையாக உள்ளது போன்று தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டும் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும்.
இந்த சூழலை பூமியில் நடப்பதாக கற்பனை செய்து பார்ப்போம். அருகருகே மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் கார்கள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தால், ஒரு காரில் உள்ளவர்கள் மற்றொரு காருக்குள் செல்வதைப் போன்றது.
அதனால்தான் டிராகன் விண்கலம் சுற்றுவட்டப் பாதையில் நுழைந்த பின், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நெருக்கமாக செல்வதற்கு இரண்டு முதல் மூன்று மணிநேரம் ஆகிறது.
• விண்வெளியில் வேளாண் புரட்சிக்கு திட்டம் - இந்திய வீரர் என்ன செய்யப் போகிறார்?
• சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர்: சவால்கள் என்ன?
• ஆக்ஸியம் 4: விண்வெளி வீரர்கள் அன்னப் பறவை பொம்மை, அல்வா எடுத்துச் செல்வது ஏன்?
• ராக்கெட் விண்வெளிக்குப் புறப்படும் போது சவாலான முதல் சில நிமிடங்களில் என்ன நடக்கும்?
அனைத்து சூழல்களும் சரியாக இருந்தால், டாக்கிங் செயல்முறைக்காக சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அடாப்டருடன் டிராகன் விண்கலம் இணையும்.
இந்த செயல்முறைக்குப் பிறகும் இருபுறமும் உள்ள கதவுகள் உடனடியாக திறக்காது.
சர்வதேச விண்வெளி நிலையத்துடன் சேர்ந்து, விண்கலத்தில் உள்ள காற்றின் அழுத்தம் சமன் செய்யப்பட்ட பிறகு, காற்று வெளியேறாமல் தடுக்கும் வகையில் மூடப்பட்ட பின்னரே, இரண்டுக்கும் இடையேயான கதவுகள் (hatches) திறக்கப்படும்.
இந்த செயல்முறை முடிந்த பின்னர், விண்கலத்தில் உள்ள விஞ்ஞானிகள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் இறங்குவார்கள்.
- இது, பிபிசி நியூஸ்ரூம் வெளியீடு
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!