news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆசியக் கிண்ணம் 2025 - கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது !

09 Sep, 2025
ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிமை ( செப்டெம்பர் 09) ஆரம்பமாகவுள்ளதாக ஆசிய கிண்ண கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
போட்டியின் முதல் போட்டி இன்று அபுதாபியில் நடைபெறவுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளுக்கு இடையே இன்றைய போட்டி நடைபெறும். இந்த ஆசியக் கிண்ணப் போட்டித் தொடரில், இரண்டு குழுக்களின் கீழ் எட்டு அணிகள் போட்டியிட உள்ளன. இலங்கை குழு B இன் கீழ் போட்டியிடவுள்ளது. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஹொங்கொங்  ஆகிய அணிகளும் இந்த குழுவில் உள்ளன. இந்தியா, பாகிஸ்தான், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் குழு "A" இன் கீழ் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!