news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் பெருமை – வவுனியாவைச் சேர்ந்த தமிழ் மருத்துவருக்கு உலகத் தரமான புலமைப்பரிசில்!

26 Nov, 2025
ஆசிய பசிபிக் பிராந்திய நோய்த்தணிப்பு மருத்துவ இணையத்தின் (Asia Pacific Hospice & Palliative Care Network) மிக உயர்ந்த தொழில்வாண்மை புலமைப்பரிசிலை, வவுனியாவைச் சேர்ந்த மருத்துவர் செல்வராசா மதுரகன் பெற்றுள்ளார். 2026 ஜனவரியில் தொடங்கும் இரண்டு ஆண்டு கால போட்டித்தன்மை கொண்ட இந்த புலமைப்பரிசிலுக்கு, ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் நூற்றுக்கணக்கான விண்ணப்பதாரிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டு பேரில் ஒரே இலங்கையர் இவரே. வடமாகாணத்தில் நோய்த்தணிப்பு மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு, பல சர்வதேச ஆய்வுகளிலும் பங்காற்றிய இவர், இந்த ஆண்டில் பொதுநலவாய மருத்துவ சங்கத்தின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார். இந்த புலமைப்பரிசில் மூலம் கல்வி, தலைமைத்துவம் மற்றும் ஆய்வு துறைகளில் இலங்கை மற்றும் வடமாகாணத்துக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படவுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!