'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு 16வது சுற்றில் பங்கேற்ற இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரினி, பயாலஜிக்கல் ஆண் (அதிகப்படியாக ஆணின் உடல் அமைப்பை கொண்டவர்) என அறியப்படும் அல்ஜீரியா நாட்டின் இமானே கெலிஃபுக்கு எதிராக மோதி 46 நொடிகளில் மூக்குடைந்த நிலையில் போட்டியிலிருந்து விலகினார்.
போட்டி தொடங்கிய 46 நொடியில் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதாவது போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே கரினி மூக்கில் வேகமாக குத்துவிட்ட கெலிஃப், இத்தாலி வீராங்கனையுன் மூக்கை உடைத்தார். ரத்தம் வழிந்த நிலையில் அதிக வலியை பொறுத்துக்கொள்ள முடியாத கரினி இனி போட்டியில் தொடர முடியாது என நடுவரிடம் கூறிவிட்டார். அதனால் வெற்றிபெற்றதாக கெலிஃபின் கைகள் உயர்த்தப்பட்டன. ஆனால் போட்டியில் தோற்ற கரினி, கெலிஃபுடன் கைகுலுக்க கூட விருப்பமில்லாமல் விலகிவிட்டார். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேடையிலேயே முட்டிப்போட்டு கரினி அழ ஆரம்பித்துவிட்டார். இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, கரினியின் நிலைமையை பார்த்த நெட்டிசன்கள் “ஆண் மரபணு குணாதிசயங்களைக் கொண்ட விளையாட்டு வீரர்கள் பெண்கள் போட்டிகளில் எப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்? இது நியாயமற்றது. இதற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெட்கப்பட வேண்டும்” என தங்களுடைய ஆதக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர் ஒருஆண்.. போட்டியில் கலந்துக்காதீங்க! ஏஞ்சலா கரினியின் தோல்விக்கு பிறகு பேசிய அவருடைய பயிற்சியாளர், “போட்டிக்கு முன்னதாக இத்தாலியிலிருந்து பலர் கரினியை அழைத்து 'தயவுசெய்து போகாதே, அது ஒரு ஆண், போட்டியில் பங்கேற்றால் அது உனக்கு ஆபத்தானதாக மாறும்' என்று எச்சரிக்கை செய்தனர்” என்று தெரிவித்துள்ளார்.THIS IS SO MUCH UNFAIR 😡
Angela Carini of Italy 🇮🇹 (Blue, female) abandons fight against Imane Khelif of Algeria 🇩🇿 (Red, Biological male) a few minutes into fight A female had to fight a biological male in the Paris 2024 Oly , Such a shame @iocmedia pic.twitter.com/g1JHoS6zQT — The Khel India (@TheKhelIndia) August 1, 2024
தோல்விக்கு பிறகு பேசிய கரினி, "நான் என் மூக்கில் கடுமையான வலியை உணர்ந்தேன், ஒரு குத்துச்சண்டை வீரரின் முதிர்ச்சியுடன், 'போதும்' என்ற என்ற முடிவை நான் எடுத்தேன். ஏனென்றால் நான் தொடர விரும்பவில்லை, என்னால் போட்டியை முடிக்க முடியவில்லை” என்று கண்ணீருடன் கூறினார். மேலும் பாலின தகுதி குறித்து பேசிய அவர், “நான் இங்கு தீர்ப்பளிக்க வரவில்லை. ஒரு தடகள வீரர் இப்படி இருப்பது சரி அல்லது சரியில்லை என்பதை நான் முடிவுசெய்ய முடியாது. நான் குத்துச்சண்டை வீரராக என் வேலையை மட்டும் செய்தேன், வளையத்தில் இறங்கி சண்டையிட்டேன். என் தலையை உயர்த்தி முன்னேறினேன். ஆனால் கடைசி கிலோமீட்டர் வரை செல்ல முடியாமல் உடைந்த இதயத்துடன் வெளியேறுகிறேன்” என்றுகூறி அழுகையை அடக்கமுடியாமல் பேசினார். தொடர்ந்து இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி என்ன முடிவை எடுக்கப்போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்..This was the right hand from Imane Khelif that left Angela Carini unable to continue. There was blood on her shorts. Her coach said: “Many people in Italy tried to call and tell her: ‘Don’t go please, it’s a man, it’s dangerous for you’pic.twitter.com/p01pZQMprx
— Oliver Brown (@oliverbrown_tel) August 1, 2024
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!