இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
ஆமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்
'அதை ஏன் கட் ஆஃப் செய்தீர்கள்?'
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனில் அமைந்திருக்கும் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது இந்த ஏர் இந்தியா விமானம்.
ஏ.டி.பி.எல் உரிமம் பெற்ற கேப்டன், சி.பி.எல். உரிமம் பெற்ற கோ-பைலட் மற்றும் 10 பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர்.
விமானத்தின் தலைமை விமானியாக பணியாற்றியவர் கேப்டன் சுமித் சபர்வால். அவரின் முதன்மை அலுவலராக அன்றைய தினம் பொறுப்பில் இருந்தவர் க்ளைவ் குந்தர். இவர்கள் இருவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள். இந்த விமான பயணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பாக அவர்கள் ஆமதாபாத் வந்தடைந்தனர். பணியை துவங்குவதற்கு முன்பு தேவையான ஓய்வு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.
இந்த விமான பயணத்தின் போது, இணை - விமானியான க்ளைவ் குந்தர் விமானத்தை இயக்க, அதனை கேப்டன் சுமித் மேற்பார்வை செய்தார்.
புறப்பட்ட சில விநாடிகளிலேயே அந்த விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை இந்திய நேரப்படி பிற்பகல் 13:38:42 மணிக்கு அடைந்தது.
அந்த வேகத்தை அடைந்த சில விநாடிகளிலேயே என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 ஆகியவற்றுக்கு எரிபொருள் சப்ளை செய்வதை கட்டுப்படுத்தும் சுவிட்ச்-கள் ஒரு விநாடி இடைவெளியில் இயக்க நிலையில் இருந்து (RUN) "கட்-ஆஃப் (Cut Off) நிலைக்குச் சென்றன.
என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்ட சில விநாடிகளிலேயே என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-ன் வேகம் குறையத் துவங்கியது.
அறிக்கையின் படி, விமானிகள் அறையில் நடைபெற்ற உரையாடல்களின் ஒலிப்பதிவில் ஒரு விமானி மற்றவரிடம் ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த மற்ற விமானி நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதில் கேள்வி கேட்டது யார், பதில் கூறியது யார் என்பதில் தெளிவில்லை.
சில விநாடிகளுக்குப் பிறகு இரண்டு விமானிகளில் ஒருவர், "மேடே, மேடே, மேடே," என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு செய்தி அனுப்பினார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே அடுத்த சில விநாடிகளில் விமானம் விபத்தில் சிக்கியது.
"இரண்டாவதாக, எரிபொருள் சுவிட்ச்சை லாக் செய்யும் பொறிமுறையின் சாத்தியமான செயலிழப்பு குறித்து விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட, 2018 ஃபெடரல் விமான போக்குவரத்து ஆணையத்தின் எச்சரிக்கையுடன் இந்த ஆரம்பக்கட்ட விசாரணை முடிவுகள் ஒத்துப் போகின்றன.
எவ்வாறாயினும் தொழில்நுட்பக் குறைபாடு இருந்தால், அது 2 சுவிட்சுகளையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கட்-ஆஃப் நிலைக்கு வர எப்படி காரணமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அவர் கூறினார்.
இந்த எச்சரிக்கை ஒரு ஆலோசனையாக மட்டுமே வெளியிடப்பட்டது, இது தொடர்பாக ஏர் இந்தியா எந்த சோதனையும் நடத்தவில்லை.
அந்நிறுவனம் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் த்ரோட்டில் தொகுதிகளை மாற்றியது. ஆனால் இதற்கும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது."
இது மனித பிழையால் ஏற்பட்டதா அல்லது அரிய தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை. விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விபத்திற்கான உண்மையான காரணத்தை உறுதியாக கூற இயலாது.
ஏர் இந்தியா கூறுவது என்ன?
இந்த விமான விபத்தில் 260 நபர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் நாட்டு குடிமகனான விஷ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார்.
விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய தகவலின் படி அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் விடுதி கட்டடம் ஒன்றின் மீது மோதியது. விபத்திற்கு பிறகு கரும்புகையால் அப்பகுதி சூழப்பட்டது.
விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி விடுதியில் தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களும் இதில் உயிரிழந்தனர்.
விடுதி கட்டடங்கள் இந்த விமான விபத்தின் போது கடுமையான சேதத்தை சந்தித்தன. அதில் மருத்துவர்களுக்கான உணவகமும் அடங்கும். ஜூன் 12 அன்று விமானம் விபத்துக்குள்ளாகும் போது அவர்கள் அனைவரும் மதிய உணவுக்காக அங்கே கூடியிருந்தனர்.
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!