Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
புதிய கடல்வழிப் பாதைகள்
ஆர்க்டிக் பனி உருகுவதால், சைபீரியா வழியாக ஐரோப்பாவை இணைக்கும் புதிய கடல்வழிப் பாதைகள் திறக்கப்படுகின்றன. இது உலக வர்த்தகத்தின் திசையையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாக பார்க்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. "இது எங்கள் கண்டம், எங்கள் பிராந்தியம்" என்ற அமெரிக்காவின் 'மண்ரோ கோட்பாடு' (Monroe Doctrine) போன்ற அணுகுமுறையை ட்ரம்ப் இங்கு கையாள்கிறார்.
இந்நிலையிலேயே அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் போன்ற முக்கிய தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற ஆலோசனைகளின்படி, அமெரிக்கா மூன்று விதமான யோசனைகளை முன்வைத்துள்ளது:
விலைக்கு வாங்குதல்
முன்பு ரஷ்யாவிடமிருந்து அலாஸ்காவையும், பிரான்சிடமிருந்து லூசியானாவையும் அமெரிக்கா வாங்கியது போன்று, கிரீன்லாந்தை 7 பில்லியன் டொலர்களுக்கு விலைக்கு வாங்க முன்வந்துள்ளது. அங்கிருக்கும் 57,000 மக்களுக்கும் தலா ஒரு இலட்சம் டொலர்கள் என்ற அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மூலோபாயக் கூட்டணி
இரண்டாவது பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சில தீவுகளைப் போன்று, கிரீன்லாந்தை ஐக்கிய நாடுகள் சபையில் தனி உறுப்பினராக வைத்திருந்தாலும், அதன் பாதுகாப்பு மற்றும் வெளியுறவு முடிவுகளை அமெரிக்காவே எடுக்கும் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குதல்.
மேற்குறித்த இரண்டும் இல்லாவிடின் இராணுவ நடவடிக்கை ஊடாக கிரீன்லாந்தை எடுப்பது காணப்படுகிறது. இது ஒரு தீவிரமான முடிவாகும். டென்மார்க்கை வெளியேற்றிவிட்டு அமெரிக்க இராணுவத்தை அங்கு நிலைநிறுத்துவதை இது குறிக்கிறது.
அந்தவகையில் அமெரிக்கா இந்த விவகாரத்தில் அழுத்தம் கொடுப்பது நேட்டோ அமைப்பிற்குள் பாரிய விரிசல்களை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
"அமெரிக்கா இராணுவ ரீதியாக கிரீன்லாந்தைக் கைப்பற்ற முயன்றால், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வரும்" என சர்வதேச அரசியல் ஆய்வாளர் சம்பிக்க ரணவக்க குறிப்பிடுகிறார். ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இந்த நகர்வை வன்மையாக எதிர்க்கின்றன.
எப்படியிருப்பினும் ட்ரம்ப் முன்வைக்கும் ஒரு வாதம் மிகவும் முக்கியமானது. "300 ஆண்டுகளுக்கு முன்பு படகில் வந்த டேனிஷ் ஆட்சியாளர்கள் எஸ்கிமோக்களை அடிமைப்படுத்தியதால் மட்டும் இந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது." இந்த வாதம் ஒரு வகையில் நியாயமானதாகத் தோன்றினாலும், அதன் பின்னணியில் இருப்பது பூர்வீகக் குடிகளின் மீதான அக்கறையல்ல என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அதன்படி கிரீன்லாந்து விவகாரம் என்பது இன்று உலக அரசியல் அதிகாரப் போட்டியின் உச்சகட்டமாக மாறியுள்ளது.
ரஷ்யா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா என நான்கு முனைகளில் இந்தப் போட்டி விரிவடைந்துள்ளது. இறுதியில் கிரீன்லாந்து ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் வருவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.
பனிப்பாறைகள் உருகுவது இயற்கைக்கும் பூமிக்கும் ஆபத்தாக இருந்தாலும், வல்லரசுகளுக்கு அது புதிய அதிகாரக் கதவுகளைத் திறந்துவிட்டுள்ளது. இந்த அதிகாரப் போட்டியில் கிரீன்லாந்தின் உண்மையான உரிமையாளர்களான இனுயிட் மக்கள் தங்களின் அடையாளத்தை இழந்துவிடக்கூடாது.
ரொபட் அன்டனி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!