தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
இதனிடையே 2020களில் கோட்டாவின் ஆதரவாளர்களே தாக்குதலின் பின்னால் இயங்கியுள்ளனர் என்று ஒரு கருத்து எங்கோ முளைத்து பரவியது. கட்டுக்கதையாயினும் விரும்கத்தக்கதாயின், மக்கள் அதனை நம்புவார்கள் என்று தொடர்பாடல் பற்றிய நிபுணர்கள் கூறுகிறார்கள்.
எனவே, அக்கதைக்கு சிறகு முளைத்தது. இப்போது பலர் அதனை நம்புகிறார்கள். கத்தோலிக்கத் தலைவர்களும் அதனை நம்புவதாகவே தெரிகிறது. “வேட்டையைத் தூக்கிச் செல்கிறவனே வேட்டைக்காரன்” என்ற சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே பலர் இக்கதையை நியாயப்படுத்துகிறார்கள்.
அதாவது கோட்டாவே பயங்கரவாத தாக்குதலால் பயன் பெற்றார். எனவே அவரே சூத்திரதாரி என்றே அவர்கள் வாதிடுகின்றனர்.
இது நடக்க முடியாத விடயம் அல்ல. ஆனால், அதனை நிரூபிக்க எவ்வித ஆதாரமும் அக்கருத்தைத் தெரிவிப்பவர்கள் முன்வைப்பதில்லை.
அசாத் மௌலானா
2023ஆம் ஆண்டு பிரிட்டனின் செனல்4 என்ற தொலைக்காட்சி சேவையுடன் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளர் அசாத் மௌலானாவும் இந்தக் கதையையே கூறினார்.
2018ஆம் ஆண்டு தாம் பிள்ளையானின் ஆலோசனைப் படி, அரச உளவுச் செவையின் அதிபராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயை சந்தித்ததாகவும் சலேயின் வேண்டுகோளுக்கு இணங்க, தாம் அவருக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையிலான சந்திப்பொன்றை ஏற்பாடு செய்ததாகவும் கோட்டா பதவிக்கு வர வசதியாக நாட்டில் பதற்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அப்போது சலே கூறியதாகவும் மௌலானா செனல்4 தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது கூறினார்.
சலேயின் அக்கருத்துப் படியே உயர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என்பதே அவரது வாதமாகும்.
பின்னர் கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தாம் பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் கூறினார். எனவே, கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் போது, கத்தோலிக்க மக்கள் தேசிய மக்கள் சக்திக்கே ஆதரவளித்தனர்.
ஆயினும், அனுரகுமார பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் கடந்த போதும், அந்த விடயத்தில் எதுவும் நடக்கவில்லை. எனவே, தாக்குதலுக்கு ஆறு வருடங்கள் பூர்த்தியாகும் இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் சாதகமான எதுவும் நடைபெறாவிட்டால் தமது மக்கள் மீண்டும் வீதியில் இறங்கிப் போராட நேரிடும் என்று கர்தினால் அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.
அதனாலோ என்னவோ ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவரும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறினார். கத்தோலிக்கத் தலைவர்கள் அதனை நம்பினார்களோ என்னவோ ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் கர்தினால் கூறியதைப் போல் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஏப்ரல் 20 ஆம் திகதி ஜனாதிபதி தமது அலுவலகத்தில் இருந்த உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பாக மைத்திரிபால நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையையும் அதனோடு சம்பந்தப்பட்ட இரகசிய ஆவணங்களையும் விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் கையளித்தார்.
உண்மையிலேயே அவரால் அது மட்டுமே செய்ய முடியும். இது வரை தெரிய வராத தாக்குதல் சூத்திரதாரி ஒருவர் இருந்தாலும் அதனை ஜனாதிபதியால் அம்பலப்படுத்த முடியாது. அதனை விசாரணையாளர்களே செய்ய வேண்டும்.
இதற்கிடையில் 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் காணாமல்போன சம்பவம் தொடர்பாக பிள்ளையான் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவர் மூலம் உயர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக பல தகவல்கள் கிடைத்தாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்ட்தில் கூறினார். அந்த சம்பவத்தோடு தெற்கில் சில அரசியல்வாதிகள் கலக்கமடைந்தமை காணக்கூடியதாக இருந்தது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தடுப்பு காவலில் இருக்கும் பிள்ளையானுடன் தொலைபேசியில் பேசுவதற்கு இரகசிய பொலிஸ் பணிப்பாளரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் கடும் பேரினவாதி என தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் கருதப்படும் பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தாம் பிள்ளையனின் சட்டத்தரணி என்று கூறி பிள்ளையானை சந்திக்க அனுமதி கோரினார் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அத்தோடு தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரானே என்று 2020ஆம் ஆண்டு அமெரிக்க எப்.பி.ஐ. நிறுவனம் வெளியிட்ட அறிக்கையொன்று இதே நாட்களில் வெளியே வந்துள்ளது. அவற்றின் மூலம் இதுவரை அம்பலமாகாத சூத்திரதாரி எவரும் இல்லை என்று கூற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
எம்.எஸ்.எம்.ஐயூப்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!