ஆஸ்கர் 2020 - 4 விருதுகளை அள்ளியது பாராசைட்!
• ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ’பாராசைட்’ பெற்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது விழாவில் கொரியன் படமான 'பாராசைட்' நான்கு விருதுகளை அள்ளியது. ஆஸ்கர் விருதுடன் பாராசைட் பட இயக்குனர் போங் ஜூன் ஹோஉலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது.
அவ்வகையில் 92-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி நடைபெற்றது. திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது.
பாராசைட் படக்குழு
இதில் போங் ஜுன் ஹோ இயக்கிய பாராசைட் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய 4 பிரிவுகளில் பாராசைட் படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
ஆங்கில மொழி அல்லாத பிற மொழியில் எடுக்கப்பட்டு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையை கொரியன் படமான ’பாராசைட்’ பெற்றுள்ளது.
ஆஸ்கர் 2020 - விருது வென்றவர்கள் முழு விவரம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
ஆஸ்கர் விருது வென்ற பிரபலங்கள்
ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கர் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.
ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:
சிறந்த படம் - பாராசைட்
சிறந்த இயக்குநர் - போங் ஜூன் ஹோ (பாராசைட்)
சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)
சிறந்த நடிகை - ரெனீ ஜெல்வேகர் (ரூடி)
சிறந்த ஆவணப்படம் - அமெரிக்கன் பேக்டரி
சிறந்த வெளிநாட்டு படம் - பாராசைட் (கொரியன்)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - டாய் ஸ்டோரி-4
1917 பட போஸ்டர்
சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஹேர் லவ்
சிறந்த ஆவண குறும்படம் - லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - தி நெய்பர்ஸ் விண்டோ
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)
சிறந்த ஒளிப்பதிவாளர் - ரோஜர் டீக்கின்ஸ் (1917)
சிறந்த படத்தொகுப்பாளர் - மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
சிறந்த திரைக்கதை - போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)
தழுவல் திரைக்கதை - டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)
சிறந்த பின்னணி இசை - ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)
சிறந்த பாடல் - லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)
சிறந்த ஒப்பனை - கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)
ஆடை வடிவமைப்பு - ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)
தயாரிப்பு வடிவமைப்பு - பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)
சிறந்த ஒலி படத்தொகுப்பு - டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)
ஒலி கோர்ப்பு - மார்க் டெய்லர் (1917)



கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!