பிறந்த சில மணி நேரத்தில் தெனவேட்டாகப் படுத்து இருந்த குழந்தை!
20 Oct, 2026
கேன் தேரை, ஆஸ்திரேலியா
ஸ்வீடன் நாட்டில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வந்த பிரின்சன் என்னும் தேரைதான் தனது எடையினால் கின்னஸ் சாதனை படைத்திருந்தது.
அதனுடைய மொத்த எடை 2.65 கிலோவாக இருந்தது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய காட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த தேரையின் எடை 2.7 கிலோவாக இருக்கிறது.
இதுகுறித்து பேசும் வனத்துறை அதிகாரி கிரே,’இந்த தேரை அதிகளவிலான பூச்சிகளையும், ஊர்வனங்களையும் மற்றும் சிறிய அளவிலான பாலூட்டி விலங்குகளையும் தனது உணவாக சாப்பிட்டு வந்திருக்கும்’ என்று கூறுகிறார்.
இந்த தேரை தன்னுடைய வாயில் எவ்வளவு பெரிய இரைகளை எடுத்துக்கொள்ள முடியுமோ தொடர்ந்து அவ்வளாவு பெரிய இரைகளை அது உணவாக எடுத்து வந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இன்று ஆஸ்திரேலிய காடுகளுக்குள் இயற்கையாக வேட்டையாடும் இனங்கள் என எதுவும் இல்லை. இந்த நிலையில் இத்தகைய நச்சு இனங்கள் ஆஸ்திரேலியாவின் பூர்வீக விலங்கினங்களை அழித்து வருவதாக கருதப்படுகிறது.
தற்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் இந்த ராட்சத கேன் தேரை எத்தனை வயதுடையதாக இருக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை.
பொதுவாக தேரைகள் 15 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. எனவே இது நிச்சயம் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் தேரையாகத்தான் இருக்கும் என்கிறார் கிரே.
இந்த ராட்சத தேரை தற்போது கருணைக்கொலை செய்யப்பட்டுவிட்டது. ஆஸ்திரிலேயாவின் இதுப்போன்ற உயிரினங்களுக்கு மேற்கொள்ளும் வழக்கமான நடைமுறைப்படி இந்த தேரையின் உடல் குயின்லாந்து அருங்காட்சியத்திற்கு கொடுக்கப்பட இருக்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!