இணையத்தில் கலக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா?
பல காமெடி வீடியோஸ்,ரீல்ஸ் இந்தப்பையனை பார்த்திருப்போம்.
பெயர் அருண்..தெலுங்கானாவை சேர்ந்த பையன், வறுமையால் நான்காம் வகுப்பு மட்டுமே படித்து,
லாரி க்ளீனிங் வேலைக்கு சேர்ந்திருக்கிறான்.
நேரு என்ற டிரைவரிடம் வேலைப்பார்க்கும் போது அவரது காமெடிக்கு இந்த பையன் சிரிக்க,
அவர் வீடியோ எடுத்து வெளியிட பையனின் சிரிப்பு சூப்பர் ஹிட்.
அத்தோட அவனது கல்வித்தகுதியை நேரு பத்தாவதும் படிக்க வைத்து மாற்றியிருக்கிறார்.
"இவ்வளவு பேர் என் சிரிப்பை ரசிப்பாங்கன்னு நான் கனவுலயும் நினைக்கல.
வறுமையோட வலில இருந்தப்போ, அந்த ஒரு நொடி சிரிப்பு என் வாழ்க்கையை மாத்திருச்சு
நேரு அண்ணா எனக்கு கடவுள் மாதிரி. அவர் வற்புறுத்தலைன்னா 10வது படிச்சுருக்கவும் மாட்டேன்.
வீடியோ எடுக்குறது மட்டுமல்லாமல், நல்லா படிச்சு மரியாதைக்குரிய வேலையைச் செய்யனும்., அவரைப் போலவே வறுமையில கஷ்ட படுற குழந்தைகளுக்கு உதவவும்னு ஆசை... " என்று சொல்லிருக்கிறான் அருண்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!