news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இணையத்தில் பட்டையை கிளப்பும் இளையராஜா இசையமைத்த 'தாரை தப்பட்டை' படப் பாடல்கள் -வீடியோ

26 Dec, 2015
இசைஞானி இளையராஜா இசையமைத்த 1000வது படமான தாரை தப்பட்டை படப் பாடல்கள் இன்று அதிகாலை இணையத்தில் வெளியானது.
பாலா இயக்கத்தில் சசிகுமார் - வரலட்சுமி - சுரேஷ் களஞ்சியம் நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் இது. பொங்கல் தினமான ஜனவரி 14-ம் தேதி இந்தப் படம் உலகெங்கும் வெளியாகிறது.
25-1451024591-ilayaraja4343-600
சாதனை
இந்தப் படத்தின் இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தார் இயக்குநர் பாலா. 1000 படங்களுக்கு இசையமைத்து பெரும் சாதனை செய்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழாவாக இதைக் கொண்டாடவும் முடிவு செய்திருந்தார். 25-1451024580-ilayaraja477
வேண்டாம் விழா
ஆனால் சமீபத்தில் பெய்த பெரும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் இப்படி ஒரு விழா வேண்டாம் என இளையராஜா உறுதியாகக் கூறிவிட்டார். எந்த விழாவும் இல்லாமல் சாதாரணமாக இசையை வெளியிடுங்கள் என்று அவர் கூறிவிட்டதால், இணையத்திலேயே தாரை தப்பட்டை இசையை வெளியிட்டுவிட்டார் பாலா. 25-1451024562-tharai-thappattai235-600
அதிகாலை
இன்று அதிகாலை 12.01 மணிக்கு தாரை தப்பட்டை பாடல்கள் யு ட்யூபில் வெளியாகின. பாடல்களைக் கேட்க ஏராளமானோர் காத்திருந்தனர். 25-1451024585-ilayaraja--s1s1-600
பரவசம்
இரண்டு தீம் மியூசிக் மற்றும் நான்கு பாடல்கள் அடங்கிய இந்த தொகுப்பைக் கேட்ட ரசிகர்கள் பரவசமாகி தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
25-1451024556-tharai-thappattai-s-s-60
டீசர்
இந்த பாடல்களுடன் படத்தின் 30 நொடி டீசர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் பாலா.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!