அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?
23 Nov, 2026
சம்ப இடத்தில் இருந்து சிலர் பேசிய வீடியோக்களும், ரத்தக் கறைகளுடன் உள்ள பள்ளிப்பை புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இறந்த குழந்தைகளின் சடலங்கள் இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தாக்குதல் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளது.
அமெரிக்கத் தரப்பில் அமெரிக்கா பள்ளிகளை குறிவைக்காது, இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலில் இறந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை புதைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள குழிகளின் புகைப்படங்களை ஈரான் பகிர்ந்துள்ளது.
இது இன்னும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்,"அமெரிக்க-இஸ்ரேலிய குண்டுவீச்சில் ஒரு தொடக்கப்பள்ளியில் கொல்லப்பட்ட 160-க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுமிகளுக்காக தோண்டப்பட்ட கல்லறைகள்.
அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ளனமிஸ்டர் ட்ரம்ப் வாக்களித்த 'மீட்பு' (rescue) என்பது நிஜத்தில் இப்படித்தான் இருக்கிறது.
காசா முதல் மீனாப் (Minab) வரை, அப்பாவி மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார். ",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!