வங்கக்கடலில் உருவாகிறது தீவிர சூறாவளி: 7 மாகாணங்களுக்கு 100 மி.மீ மழை!
27 Oct, 2026
'சரி இத்துடன் எனது கதை முடிகின்றது என நான் நினைத்தது இன்றும் நினைவிலிருக்கின்றது ,46 வயதில் உயிரிழப்பது குறித்து நான் சிந்தித்து பார்க்கவில்லை"
'நான் எனது இறுதி தருணம் வந்துவிட்டது என உறுதியாக நம்பினேன்",என மேலும் தெரிவித்த அவர் 'உணர்வுகள் என்று எதுவும் இருக்கவில்லை, அந்த அதிர்ச்சி மிகவும் பலமானதாக காணப்பட்டது எப்படியாவது உயிர்தப்பிவிடவேண்டும் என்பதை தவிர நீங்கள் வேறு எதனையும் சிந்திக்க மாட்டீர்கள் " என தெரிவிக்கின்றார்.
சுனாமி அலைகள் நின்றதும் அவர் பல்கனியொன்றில் தஞ்சம்புகுந்தார்.
அதன் பின்னரே நான் எனது தோளில் பெரிய துளையொன்றை கண்டேன்,உண்மையில் நான் வலியால் துடித்திருக்கவேண்டும், அதிர்ச்சி என்னை தடுத்துவிட்டது என அவர் தெரிவிக்கின்றார்.
ரொபியை விருந்தினர் விடுதிக்கு கொண்டு சென்றனர் அங்கிருந்த மருத்துவர்கள் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என தெரிவித்தனர்.
'அந்த பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான வழியே இல்லை,எல்லா வீதிகளும் மூடப்பட்டிருந்தன,மின்சாரம் என்பதே இல்லை மின்கம்பங்கள் முற்றாக வீழ்ந்து அழிந்திருந்தன அனைத்து கால்வாய்களும் உடைந்து காணப்பட்டதால் சுத்தம் என்பது காணப்படவில்லை "என அவர் தெரிவிக்கின்றார்.
'அது ஒரு பயங்கரமான இரவு இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன் அந்த இரவு முடிவின்றி என்றென்றும் தொடரும் போல தோன்றியது" என அவர் தெரிவிக்கின்றார்.
மறுநாள் காலை விமானப்படையினர் ரொபியை கடுமையாக காயமடைந்த வேறு பலருடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நான் பெரும் நன்றியும் கடப்பாடும் உடையவனாக உணர்ந்தேன் என்கின்றார் அவர்.
'முன்வாயில் வழியாக மருத்துவமனைக்குள் நுழைந்தோம்,முன்பகுதியிலேயே நூற்றுக்கணக்கான உடல்கள் காணப்பட்டன
பிரேதஅறை நிரம்பிவிட்டமையே இதற்கான காரணம் ".
'மேலும் தங்கள் உறவுகளை இழந்தவர்கள் உடல்களை அடையாளம் காண்பதற்காகவும் அந்த இடத்தில் உடல்களை அடுக்கிவைத்திருந்தனர்."
2004 சுனாமிக்கு பின்னர் பல தடவை மீண்டும் இலங்கை வந்துள்ள ரொவே இந்த முறையும் (20வது ஆண்டு ) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவ்வேளை எனக்கு பெரும் உதவியாகயிருந்த உள்ளுர் மக்களிற்காக நான் அங்கு செல்கின்றேன்,வலி வேதனை ஓரளவிற்கு குறைவடைந்துள்ளது, சில வேளைகளில் அது வெவ்வேறு விதங்களில் வெளியாகின்றது என அவர் தெரிவிக்கின்றார்.
நான் தற்போதும் சில நேரங்களில் இரவில் அச்சத்தினால் பாதிக்கப்படுகின்றேன்,சில சமயம் அலறுகின்றேன் சத்தமிடுகின்றேன், இயற்கை மிகவும் வலுவானதாக காணப்படும்போது நான் அச்சமடைகின்றேன், என அவர் குறிப்பிடுகின்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!