ஒரு நடிகைக்கு இவ்வளவு பெரிய கட் அவுட் இதுவே முதல் முறை.. நயன்தாராவின் 60 அடி உயர கட் கவுட்டை கண்டு வியந்த ரெஜினா
26 Oct, 2026
ஹருண் செல்வந்தர்கள் பட்டியல் - 2024 ('Hurun Rich List 2024') இதை உறுதி செய்திருக்கிறது. .எப்படி ஒரு நடிகையால் இவ்வளவு கோடிகளுக்கு அதிபதியாக முடிந்தது?
1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற ஜுகி சாவ்லா அடுத்த சில ஆண்டுகளிலேயே பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
தொடர்ந்து, ஷாருக்கான் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் 2010 ஆம் ஆண்டிற்குப் பின் கதாபாத்திர நடிகையாக மாறிவிட்டார்.
கடந்த 13 ஆண்டுகளாக இவர் நடித்த எந்தப் படமும் ஹிட் ஆகவில்லை. இருந்தும் இவரின் வருமானம் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
காரணம், ஜுகிக்கு சினிமாவிலிருந்து வரும் சம்பாத்தியம் பெரிய விஷயமே இல்லை. .சினிமாவைத் தாண்டி இவர் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
சில நிறுவங்களில் முதலீடும் செய்துள்ளார். அதில், தன் நெருங்கிய நண்பரான நடிகர் ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தின் இணை பங்குதாரராகவும், ரூ.9,150 கோடி மதிப்புள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.620 கோடி வரை முதலீடு செய்து இவரும் ஒரு உரிமையாளராக இருக்கிறார்.
.இதன் மூலமே ஜுகி அதிகப்படியான வருவாய் ஈட்டி வருகிறாராம். மேலும், சௌராஷ்ட்ரா சிமெண்ட் நிறுவனத்தின் 0.07 பங்குகளை வைத்திருப்பதுடன் மும்பையில் இரண்டு பெரிய உணவகங்களையும் நடத்தி வருகிறார்.
இதுபோக, மிக உயர்ந்த பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். சினிமாவில் சம்பாதித்ததை சரியாக முதலீடு செய்து உச்சம் தொட்டவர்களில் ஒருவரான ஜுகி, பல சினிமா பிரபலங்களுக்கு முதலீடு குறித்த அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்!
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!