news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 62 இலட்சத்தை நெருங்கியது!! உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 தாண்டியது !!

28 Sep, 2020
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அடைந்து­­­ வரும் நிலையில், இன்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கொரோனா தொற்று எண்ணிக் கை பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் களின் எண்ணிக்கை 62 இலட்சத்தை நெருங்கியது. 50.16 இலட்சம் பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங் கள் தகவலை வெளியிட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகி றது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்த எண்ணிக் கை 60 இலட்சத்து 74 ஆயிரத்து 702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 இலட்சத்து 16 ஆயிரத்து 520பேர் குணமடைந்துள்ளனர், 9 இலட்சத்து 62 ஆயிரத்து 640பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 542 ஆக உயர்ந்துள்ள மை குறிப்பிடத்தக்கது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!