இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கி உள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட தகவலின்படி மொத்தம் 395048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை இல்லாத அளவில் நேற்று மட்டும் 14516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
375 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12948 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 3.3 சதவீதமாக உள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124331 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5893 பேர் உயிரிழந்துள்ளனர். 62773 பேர் குணமடைந்துள்ளனர்.
55665 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 54449 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.
30271 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 23512 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
டெல்லியில் 53116 பேருக்கும், குஜராத்தில் 26141 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இரு மாநிலங்களிலும் உயிரிழப்பு தமிழகத்தை விட அதிக அளவில் உள்ளது. டெல்லியில் 2035 பேரும், குஜராத்தில் 1618 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 529 பேரும், உத்தர பிரதேசத்தில் 488 பேரும், மத்திய பிரதேசத்தில் 495 பேரும் உயிரிழந்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!