news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இந்தோனேசியாவிலும் இன்று (30) காலை நிலநடுக்கம் பீதியில் உறைந்த மக்கள்

30 Mar, 2025
இந்தோனேசியாவிலும் இன்று (30) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.4-ஆக பதிவானதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!