அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?
23 Nov, 2026
பர்வதனேனி ஹரீஷ்
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தது. இந்த தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டு, 251 பேர் பணயக்கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்னர் காஸாவில் இஸ்ரேல் போரை தொடங்கியது
போர் தொடங்கியதில் இருந்து காஸாவில் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த போர் தொடங்கி ஏறக்குறைய ஒரு வருடம் ஆகப்போகும் நிலையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மேற்குக் கரையில் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதில், 680 பாலத்தீனர்கள் மற்றும் 22 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா கூறியுள்ளது.
"பாலத்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது. மேலும் இங்கிருந்து இஸ்ரேல் முடிந்தவரை விரைவாக வெளியேற வேண்டும்", என்று ஐநா-வின் சர்வதேச நீதிமன்றத்தின் 15 பேர் கொண்ட நீதிபதிகள் குழு கருத்து தெரிவித்தது.
"ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில், இஸ்ரேலில் இருந்து குடியேறியவர்கள் அனைவரையும் வெளியேற வேண்டும் மற்றும் அவர்கள் அங்கு செய்த சேதத்திற்காக சம்பந்தப்பட்ட நபர்களிடம் இழப்பீடு வழங்க வேண்டும்", என்றும் சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதனையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை
1967-ஆம் ஆண்டில் இருந்து, மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் சுமார் 7 லட்சம் யூதர்கள் வசிக்கும், சுமார் 160 குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த குடியேற்றங்கள் "சர்வதேச சட்டத்திற்கு புறம்பானவை" என்று சர்வதேச நீதிமன்றம் கூறியது. இதற்காக இஸ்ரேல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
"சர்வதேச நீதிமன்றம் 'பொய்யான முடிவுகளை' எடுத்துள்ளன. தங்களது சொந்த இடத்தில் யூத மக்கள் இருப்பது ஒரு ஆக்கிரமிப்பு இல்லை", என்று இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டார்.
புதன்கிழமை அன்று ஐநா பொது சபை சர்வதேச நீதிமன்றத்தின் இந்த கருத்தை வரவேற்றது.
"இன்னும் 12 மாதங்களுக்குள், ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பகுதிகளில் சட்டவிரோதமாக இருப்பதை இஸ்ரேல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள சட்ட விதிகளுக்கும் இஸ்ரேல் தாமதமின்றி இணங்க வேண்டும் என்றும்'' ஐ.நா திர்மானம் கோருகிறது
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பாலத்தீன ஆதரவான அதிகாரிகள் ஐநா பொதுசபையில் கொண்டாடினர்.
இது குறித்து இஸ்ரேல் மற்றும் பாலத்தீனம் கூறுவது என்ன?
"பாலத்தீனத்திற்கும் சர்வதேச சட்டத்திற்கும் இது ஒரு முக்கிய மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த தருணம்", என்று மேற்குக் கரையை சேர்ந்த பாலத்தீன அதிகாரசபையின் வெளியுறவு அமைச்சகம் விவரித்துள்ளது.
"இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேற வேண்டும் மற்றும் அதன் குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்பதற்கு ஆதரவாக ஐ.நா. உறுப்பு நாடுகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் இருப்பது உலகளாவிய ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கிறது.
மேலும் தற்போது பாலத்தீன மக்களிடம் இருந்து பறிக்கமுடியாத சுய ஆட்சி உரிமைகளை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.
"இது உண்மைக்கு புறம்பான, பயங்கரவாதத்தை ஊக்குவித்து, அமைதியை சீர்குலைக்க வழிவகுக்கும் ஒரு முடிவு'' என்று இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்த தீர்மானம் "ஹமாஸ் ஆயுதக்குழுவிற்கு வலு சேர்க்கும் விதமாகவும், பயங்கரவாதத்திற்கு பலனளிப்பதாகவும் இந்த தீர்மானம் உள்ளது. பாலத்தீன அதிகாரிகள் போரை நிறுத்துவதற்காக அல்லாமல் இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கவே ஒரு பிரசாரத்தை நடத்துகிறது" என்றும் அது குற்றம் சாட்டியது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்தது.
“இன்று இந்த தீர்மானத்தின் மூலம் முன்னேற்றத்தின் மீது நம்பிக்கை இல்லை. இந்த தீர்மானம் பாலத்தீனர்களின் உயிரைக் காப்பாற்றாது, பணயக்கைதிகளை மீட்க உதவாது, இஸ்ரேல் அங்கு குடியேறுவதை முடிவுக்கு கொண்டு வார முடியாது. அமைதியை நிலைநாட்ட வழி வகுக்காது", என்று அமெரிக்க தூதரக அதிகாரி லிண்டா தாமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!