news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு !

29 Mar, 2023
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும். அத்துடன் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும். ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும். இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!