news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!!

01 Nov, 2023
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 356 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 423 ரூபாவாகும் இதன்படி, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒட்டோ டீசல் 356 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 431 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மண்ணெண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 7 ரூபாவினால் ​அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 249 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!