news@ilakkiyainfo.com

பிரிவுகள்

“இன்று ரூ.275 கோடி சம்பளம் வாங்கும் தளபதி விஜயின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – ஷாக்கிங்க் தகவல் வெளியானது!”

05 Dec, 2025

தளபதி விஜய், சமீபத்தில் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இது அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்திற்கு விஜய்க்கு ரூ. 275 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் No.1 நடிகராகவும் விஜய் திகழ்கிறார்.

அவரது தற்போதைய உயரத்தைக் காணும் ரசிகர்கள், “விஜய் தனது வாழ்க்கையில் முதல் சம்பளமாக எவ்வளவு பெற்றார்?” என்ற கேள்வியில் ஆர்வமாக உள்ளனர். அதற்கான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

விஜய் கதாநாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானாலும், அதற்கு முன் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

அந்த படங்களில் ஒன்றான ‘வெற்றி’ திரைப்படத்தில் விஜயகாந்த் மற்றும் நம்பியார் நடித்த முக்கிய கதாபாத்திரங்களுக்கு இணையாக, விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அந்த படத்துக்கு விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளம் வெறும் ரூ.500 என கூறப்படுகிறது. இதுவே அவரது வாழ்க்கையின் முதல் சம்பளம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாதாலும், “ரூ.500 சம்பளத்தில் தொடங்கி, இன்று ரூ.275 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது தளபதி விஜயின் கடின உழைப்பின் விளைவு” என்று ரசிகர்கள் பெருமையாக பகிர்ந்து வருகிறார்கள்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!