news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலை குறைப்பு

03 May, 2024
லிட்ரோ சமையல் எரிவாயு விலை இன்று (03) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 175 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3940 ரூபாவாகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 70 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1582 ரூபா என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 2.3 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. இதற்கிணங்க, அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!