இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
மேலும், பாகிஸ்தானியர்களுக்கு இதைவிட பெரிய துன்பம் இருக்க முடியுமா என்று அவர் கூறினார். பாகிஸ்தானில் ஒருபுறம் நாடாளுமன்றத்தில் ஒசாமா பின்லேடனை தியாகி என்று அந்த நாட்டின் பிரதமரே குறிப்பிடும் நிலையில், மறுபுறம் அந்த நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள நீதிமன்றத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக அல்-கய்தா அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபின் குஜாராவாலாவில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் அல்-கய்தாவின் ஐந்து உறுப்பினர்கள் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்துள்ளது. அப்துல்லா உமைர், அகமது உர் ரஹ்மான், அசிம் அக்பர் சயீத், முகமது யாகூப் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் தண்டிக்கப்பட்டவர்களில் அடங்குவர். குற்றவாளிகளுக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐந்து குற்றவாளிகளின் தனிப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் குஜராத்தில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தீவிரவாத தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியபோது கைது செய்யப்பட்டனர்.Prime Minister Imran Khan speech at the assembly #PMIKAssemblySpeech pic.twitter.com/wta9RYm8Hd
— PTI Sindh Official (@PTISindhOffice) June 25, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!