news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரண்டு லொறிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சாரதி பலி

17 Dec, 2023
அம்பலாங்கொடை பகுதியில் இன்று (17) அதிகாலை 2 லொறிகள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் விபத்துக்குள்ளான லொறியொன்றின் சாரதி எனவும் அவர் மெட்டியகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது . இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!