என்ன அழகான திட்டம்! இஸ்ரேல் ராணுவம், வர்த்தகம், பொருளாதாரம் ஆகிய அம்சங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.(நிலமெல்லாம் ரத்தம் - 68)
20 Nov, 2026
தமிழர் கூட்டமைப்பினர்
இந்த நூல் பல விதங்களில் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தேசிய இனப் பிரச்சனை என்பது ஒரு அரசியல் பிரச்சனையா? அல்லது பயங்கரவாத பிரச்சனையா? அரசியல் பிரச்சனை எனில் அவை அரசியல் வழிமுறைகளில் அணுகப்பட்டிருக்க வேண்டும்.
அதனையே ராணுவம் அரசிடம் வற்புறுத்தியிருக்க வேண்டும். அதை விடுத்து அது ஒரு பயங்கரவாத பிரச்சனையாக கருதினார்களா? என்பதையும், பிற்காலத்தில் அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட வேளையிலும், அவ் வேளையில் தமிழர் கூட்டமைப்பினர் அவருக்கு வாக்களிக்கும்படி கோரிய பின்னணிகளையும், இப்போது அவரின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவரது அனுபவங்களை இந்த நூலின் மூலம் அறிய முடியும்.
எனவே இலங்கையின் அரசியல் வரலாற்றினை அறியத் துடிக்கும் வாசகர்களுக்கு தரும் பொருட்டு அந் நூலின் சாராம்சத்தினை தொகுத்து வழங்க எண்ணி அதன் முதற் பகுதியை இன்று முதல் வெளியிடுகிறோம்.
நூலி;ன்; முகவுரையில்;; இனப் பிரச்சனையா? பயங்கரவாதமா? என்பதற்கான பதில் கிடைக்கிறது.
அம் முகவுரையில் முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் நிலவிய பயமுறுத்தல், அழிவுகள், துன்பங்கள் போன்றவற்றை ஏற்படுத்திய பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதே நோக்கமாக இருந்தது.
விடுதலைப் புலிகள் முழு நாட்டினையும் 30 ஆண்டுகளாக பணயமாக வைத்திருந்தார்கள். நாளாந்த வாழ்வு தினமும் இருள் கௌவ்வியதாக அமைந்தது.
அது மக்களைத் தொடர்ச்சியாக பயமுறுத்திய நிலையிலும், பல குடும்பங்களின் வாழ்வு சிதைந்து சென்று நாட்டின் முன்னேற்றம் என்பது முடங்கியது.
இந் நிலை பல லட்சம் இலங்கையர்களை மட்டுமல்ல, எமது நாட்டில் வாழ்ந்த பிற நாட்டவர்களையும், உல்லாசப் பயணிகளையும் மிகவும் பாதித்தது.
பயங்கரவாதிகளின் நோக்கம் நாட்டில் அழிவுகளை மேற்கொள்வது மட்டுமல்ல, எமது தேசத்தையும், நிலங்களையும், மக்களையும் பிரிப்பதே நோக்கமாக இருந்தது.
மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமாக இப் பயங்கரவாதிகள் இணைந்து இருந்தமையால் அவர்களை அகற்றுவது இலகுவான காரியமல்ல.
அதற்கு அசைக்க முடியாத ஈடுபாடு, திட்டமிடப்பட்ட வகையிலான தந்திரோபாயங்கள், கூட்டுத் தியாகம் என்பன தேவையாகின.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்கள் எனது ராணுவத்தின் உதவியோடு பொறுப்போடு செயற்படுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிட்டியது.
ஈழப் போர் 4 இன் போது எமது சக ஆயுதப் படையினரான பொலீஸ், விஷேச அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புப் பிரிவு மற்றும் எண்ணிக்கையிலடங்காத பலரின் உதவிகளை ஒன்றிணைத்து செயற்பட்டோம்.
மேற்குறித்த விபரங்களைப் படிக்கும்போது ராணுவம் இப் பிரச்சனைகளை ஒரு பயங்கரவாதப் பிரச்சனையாகவே நோக்கியது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைக்கான போராட்டங்களை பயங்கரவாதமாக கருதி ஒடுக்கிய இந்த ராணுவ அதிகாரி எவ்வாறு பிற்காலத்தில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களால் ஆதரிக்கப்பட்டார்? ஏன்பது மிக ஆச்சரியமாக உள்ளதல்லவா? இதற்கான பதில் பின்னர் கிடைக்குமா? ஏன்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
'ராணுவ கட்டளைத் தளபதி நாட்டுக்கு வழங்கிய சத்தியம்' என்னவெனில் இந்தப் போரை இன்னொரு கட்டளைத் தளபதியிடம் ஒப்படைத்துச் செல்ல மாட்டேன் என்பதாகும்.
இந்த நூல் இரண்டு தொகுதிகளாக வெளி வரும் எனவும், அதனடிப்படையில் தற்போது அதன் முதற் தொகுதியே வெளியிடப்பட்டுள்ளது.
அந் நூலின் முதல் அத்தியாயம் 'ஈழப் போரின் அறிமுகம்' என்றே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனைச் சற்று விபரமாக தருவது வாசகர்களுக்கு ராணுவ தரப்பில் இப் போரை எவ்வாறு புரிந்துள்ளார்கள்? என்பதை அறிய உதவும் என எண்ணுகிறேன்.
விடுதலைப் புலிகளினால் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட போர் 'ஈழப் போர்' என்றே பொதுவாக அழைக்கப்படுகிறது.
அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கு என்பது இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கில் 'தனித் தமிழ் தாயகம்' நிறுவதலாகும். இப் பிரதேசத்திற்குள் சிறிய அளவில் சிங்கள, முஸ்லீம் சமூகங்கள் வாழ்கின்றன.
இப் போர் நான்கு முக்கிய கட்டங்களாக இடம்பெற்றது. அதாவது ஈழப் போர் 1, 2, 3, 4 என்பதாகும். ஓவ்வொரு கட்டங்களின் இடையே அரசினாலும், சர்வதேச மத்தியஸ்தங்களாலும் போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தது.
இப் போர் நிறுத்தங்களைப் பயன்படுத்தி தமது ராணுவ பலத்தையும், ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் அதிகரித்தார்கள்.
இந்த இடைவேளையில் ராணுவத்தினர் தமது ராஜ தந்திர நகர்வுகளையும், போருக்கான தயாரிப்புகளையும் அதற்கான தரத்தில் வைத்திருக்கவில்லை.
இப் பிரச்சனைக்கான மூல காரணங்களைத் தேடிப் பார்த்தால் 1975ம் ஆண்டுகாலத்தில் ஒரு சில இளைஞர்களின் ஆயுத எதிர்ப்பாகவே தொடங்கியது.
அரசியல்வாதிகள் பலர் தமது தேர்தல் வெற்றிக்கு இளைஞர்கள் உதவினால் தாம் தனி நாட்டினைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
இந்த வாக்குறுதிகள் பலவும் வெறுமையானவை எனத் தெரிந்த போது அந்த இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டனர்.
இந்த இயக்கம் 17 வயதான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவருடன் இணைந்த நான்கு அல்லது ஐந்து பேருடன் தொடங்கியது.
மிகவும் மறைந்து பழைய ஆயுதங்கள், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் என்பவற்றுடன் செயற்பட்டார்கள்.
இவர்களின் தாக்குதல்களில் முதலில் பலியானவர் பலரும் அறிந்த அளவில் முன்னாள் யாழ். மேயர் அல்பிரட் துரையப்பா என்பவராகும்.
அவர் ஒரு சட்டத்தரணி என்பதுடன், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டார்.
சிங்கள பெரும்பான்மை மக்களின் ஆதரவைக் கொண்டுள்ள சிங்களக் கட்சியின் ஆதரவாளராக இருப்பது தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வதாகவும், சிங்கள அரசுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் பிரபாகரன் எண்ணினார்.
அவர் கோவிலுக்கு வழிபாட்டுக்கு தனது மனைவி, மகள் ஆகியோருடன் சென்றிருந்த வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு அவர்களது ஈவிரக்கமில்லாத செயற்பாட்டின் ஆரம்பமாக அமைந்தது.
அல்பிரட் துரையப்பா
இக் கால வேளையில் வடக்கிலும், கிழக்கிலும் மிகவும் குறைந்த ராணுவத்தினரே நிறுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் கடல் வழியாக வரும் சட்ட விரோத குடியேற்றக்காரர்களைத் தடுப்பது என்பதாகும். இவர்கள் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அதனைப் பொலீசாரே கண்காணித்தனர்.
அங்கு ராணுவத்தினரின் மொத்த எண்ணிக்கை 15,000 ஆகவும், கடற்படை, விமானப்படையைச் சார்ந்தோர் சுமார் 6,000 பேர் இருந்தனர்.
இவர்களிடம் கன ரக ஆயுதங்களோ, அல்லது எதிர்ப்புரட்சியாளர்களை கையாளும் பயிற்சிகளையோ அவர்கள் பெற்றிருக்கவில்லை.
மேயர். அல்பிரட் துரையப்பாவின் கொலை தொடர்பான தேடுதல்கள் ஆரம்பிக்கப்பட்டன. பிரபாகரனும், அவரது சகாக்களும் மறைவில் சென்று மேலும் பலரை தமது இயக்கத்தில் இணைத்தனர்.
1978ம் ஆண்டளவில் முல்லைத் தீவுப் பகுதியிலுள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்து குற்றவியல் விசாரணைக் குழுவின் அதிகாரிகள் மூவரை அதில் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை என்பவர் உட்பட படுகொலை செய்தனர்.
இந் நிகழ்வு பிரபாகரனை மறைந்து வாழ்பவர் என்ற நிலையிலிருந்து பயங்கரவாதிகளின் தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியது.
இக் காலத்தில் வேறு பல அமைப்புகள் தோற்றம் பெற்ற போதிலும் அவை பிரிவினையை வலியுறுத்தும் நிகழ்ச்சி நிரலையே கொண்டிருந்தன.
அரசாங்கமும், பாதுகாப்பு படையினரும் இவற்றை எதிர்ப் புரட்சி அமைப்புகளாகவே கருதினர். இதன் காரணமாக வடக்கிலும், கிழக்கிலும் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதோடு பொது மக்களைப் பாதுகாப்பதற்கான நேரடி நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டது.
இதனை அவதானித்த விடுதலைப் புலிகள் ராணுவ, பொலீஸ் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக பொது மக்கள் மத்தியில் உளவுகளை அறிவதற்காக பலரை நியமித்தனர்.
ராணுவத்தோடு உறவு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்படின் மிக விரைவாகவே அவர்களை ஒழித்தனர்.
இதனால் பாதுகாப்பு படையினருடன் பொதுமக்கள் எந்த உறவையும் வைத்திருக்க விரும்புவதில்லை.
அத்துடன் தமிழ் பகுதியில் செயற்பட்ட தமிழ் பொலீஸ் அதிகாரிகள் தமக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கருதினர். இதனால் இப் பிரதேசங்களிலிருந்து எவரும் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு விரும்புவதில்லை. இதனால் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு மேலும் பலவீனமடைந்தது.
ராணுவத்திற்கு உள்ளுரளவில் உளவுத் தகவல்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டதால் அவர்களுக்கான பாதுகாப்பு வெற்றிடமான நிலையில்தான் அவர்கள் செயற்பட்டார்கள்.
ஆனால் அவர்கள் எந் நேரத்திலும் கடத்தப்படும் ஆபத்து இருந்தது. இதனால் தமக்கு எந் நேரத்திலும் ஆபத்து உண்டு என்ற சிந்தனையுடன்தான் ராணுவத்தினர் செயற்பட்டனர்.
1981ம் ஆண்டு திருப்புமுனைச் சம்பவம் ஏற்பட்டது. ராணுவத்தினரை மிகவும் திட்டமிட்டே தாக்குவதற்கு பிரபாகரன் முனைந்தார்.
யாழ். நகரத்தில் பட்டப்பகல் வேளையில் தனியாக நின்றிருந்த ராணுவ வீரனை பின்புறமாக சுட்டு அவரது துப்பாக்கியையும் பறித்து சென்றார். இது மிகவும் திட்டமிட்ட முரண்பாடுகளைக் கூர்மையடையச் செய்யும் நிகழ்வாக அமைந்தது.
இத் தாக்குதல் ராணுவத்தின் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 1971ம் ஆண்டு இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சியின் பின்னர் ராணுவம் எதிர்நோக்கிய பெரும் சவாலாக அமைந்தது.
இந் நிகழ்வு அவ்வப்போது நிகழும் பிரச்சனையாக இருந்த போதிலும் ராணுவத்தினர் பொதுமக்களைத் தாக்கினர். பின்னர் ராணுவம் நிலமைகளைக் கட்டுக்கள் கொண்டு வந்தது.
வாசகர்களே!
இச் சம்பவத்தின் பின்னர் அதாவது 1983ம் ஆண்டு யூலை 22ம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ராணுவ வாகனம் ஒன்று கடத்திச் செல்லப்பட்டது. அந்த விபரங்களை அடுத்த தொடரில் பார்க்கலாம்.
தொடரும் ......
பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்களின் “Army Commander’s Promise to the nation” ' என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்
மொழிபெயர்;ப்பு : வி. சிவலிங்கம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!