news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இராணுவ அதிகாரி அறைந்ததில் சிப்பாயின் காது கிழிந்தது

21 Oct, 2020
இராணுவச் சிப்பாய் ஒருவர் காது சவ்வு கிழந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இராணுவ அதிகாரி சிப்பாய்க்கு அறைந்ததாலேயே சிப்பாய் பாதிக்கப்பட்டுள்ளார்.   சார்ஜன்ட் தர அதிகாரி மீது இராணுவ சிப்பாய் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்துள்ளார். யாழ்ப்பாணம் பண்ணைப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் முகாமின் உயர் அதிகாரியால் இன்று காலையில் பணிக்கப்பட்ட வேலைகளைச் செய்ய குறித்த சார்ஜன்ட் தனக்கு கீழ் பணிபுரியும் இராணுவ சிப்பாய்க்குப் பணித்துள்ளார். உயரதிகாரி குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய வருமாறு அழைத்த போது சிப்பாய் மறுத்ததால் இராணுவ அதிகாரி சிப்பாய்க்கு அறைந்துள்ளார். அதில் சிப்பாயின் காது பாதிக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினராலும் இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!