Israel Election : உலகின் மிக விசித்திரமான தேர்தல் முறை — அக்டோபர் 27ல் என்ன நடக்கும்? Explained
25 Oct, 2026
Hussein Yazdanpanah Kurdish military leader, serving as the commander-in-chief of the Kurdistan Freedom Party (PAK).[
வடக்கு இராக்கில் புலம்பெயர்ந்து வாழும் இரானிய குர்திஷ் எதிர்ப்புக் குழுக்கள், எல்லையைத் தாண்டிச் செல்லும் திட்டங்கள் தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளன. இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகாலமாகவே அவர்களிடம் உள்ளன. ஆனால் தங்கள் போராளிகள் ஏற்கெனவே எல்லை தாண்டிவிட்டதாகக் கூறப்படும் தகவல்களை அவர்கள் திட்டவட்டமாக மறுக்கின்றனர். "இஸ்லாமிய குடியரசு உருவான காலம் முதல், கடந்த 47 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் தயாராகி வருகிறோம்," என்று குர்திஸ்தான் சுதந்திரக் கட்சியின் ஹசன் யஸ்தான்பனா (Hussein Yazdanpanah) கூறினார். இந்தக் கட்சி தங்களிடம்தான் மிகப்பெரிய ஆயுதப் படை இருப்பதாகக் கூறுகிறது. ஆனால், "ஒரு பெஷ்மெர்கா கூட இன்னும் நகரவில்லை" என்று அவர் கூறினார். 'பெஷ்மெர்கா'என்ற குர்திஷ் சொல்லுக்கு "மரணத்தை எதிர்கொள்பவர்கள்" என்று பொருள்.
peshmerga_kurdish_army
ஆறு எதிர்ப்பு குழு
சமீபத்தில் ஒரு கூட்டணியை உருவாக்கிய ஆறு எதிர்ப்பு குழுக்களும் அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைந்து செயல்படுவதாக யஸ்தான்பனா கூறினார்.
"யாரும் தனியாக நகர மாட்டார்கள். எங்கள் சகோதரர்கள் நகரப் போகிறார்கள் என்றால் அது எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.
இந்த வாரம் போராளிகள் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வார்கள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. முதலில், அமெரிக்கா அதற்கான வழியை வகுக்க வேண்டும்.
"வான் தாக்குதல் நிறுத்தப்படாவிட்டால் எங்களால் நகர முடியாது. மேலும் இரான் ஆட்சியின் ஆயுதக் கிடங்குகள் அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், அது தற்கொலைக்கு சமமானது. இந்த ஆட்சி மிகவும் கொடூரமானது, எங்களிடம் உள்ள மிகவும் மேம்பட்ட ஆயுதம் கலாஷ்னிகோவ் மட்டுமே," என்று குறிப்பிட்டார்.
குர்திஷ் போராளிகளைப் பாதுகாக்க அமெரிக்கா 'விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலத்தை உருவாக்க வேண்டும்' என்று அவர் விரும்புகிறார்.
"நாங்கள் இதை பலமுறை கேட்டுள்ளோம். 'இது எங்களுக்கு அவசரமாகத் தேவை' என்று மின்னஞ்சல் அனுப்பியவர் நான்தான்" என்று அவர் கூறினார்.
வடக்கு இராக்கில் உள்ள இரானிய குர்திஷ் குழுக்களின் தளங்கள் மீது இரான் ஏவுகணைகளை வீசியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
,முஸ்தபா மௌலூதி
குர்திஷ் குழுக்கள் தங்கள் படைகள் சில இரானுக்குள் நுழைந்ததாக வெளியான செய்திகளை மறுத்துள்ளன.
எவ்வளவு துருப்புக்களைத் திரட்ட முடியும்?
குர்துகளால் எத்தனை துருப்புக்களைத் திரட்ட முடியும் என்பதை மதிப்பிடுவது கடினம்.
"ஏற்கனவே உள்ளே இருப்பவர்களையும் சேர்த்து இது சில ஆயிரங்களாக இருக்கலாம்," என்று குர்திஷ் இனத்தைச் சேர்ந்த உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகிறார்.
"இரானில் ஏற்படும் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள், இதன் மூலம் வருங்காலத்திலும் தங்கள் பங்கு இருப்பதை உறுதி செய்ய நினைக்கிறார்கள். வரலாற்றின் பாடங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்."
அமெரிக்காவின் வாக்குறுதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது செயல்படுவதற்கான நேரம் என்று சில இரானிய குர்துகள் கூறுகின்றனர்.
"எங்கள் தாயகத்தைப் பார்க்கும் சிறிய நம்பிக்கை இருந்தாலே போதும்" என்று இரானிய எல்லைக்கு அருகிலுள்ள சுலைமானியா நகரைச் சேர்ந்த ஒரு பெண் கூறினார்.
"நாங்கள் அதை [இரானை] கொலைகாரர்களின் இஸ்லாமிய ஆட்சி என்று அழைக்கிறோம். நாங்கள் அவர்களை அவ்வளவு வெறுக்கிறோம். அவர்கள் பலரைக் கொன்றுள்ளனர்."
இவை அனைத்தும் இராக்கை இக்கட்டான நிலையில் ஆழ்த்தியுள்ளன. அண்டை நாட்டுப் போருக்குள் தாங்களும் இழுக்கப்படுவோமோ என்ற அச்சம் அங்கு நிலவுகிறது.
''பயங்கரவாதச் செயல்களைச் செய்ய, இராக் மண்ணிலிருந்து இரானிய எல்லைக்குள் ஊடுருவவோ அல்லது கடக்கவோ எந்தக் குழுக்களையும் அனுமதிக்க மாட்டோம்," என்று இராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குர்திஷ் படைகள் எல்லையைத் தாண்டினால், அது யஸ்தான்பனாவிற்கு இனிப்பும் கசப்பும் கலந்த தருணமாக இருக்கும்.
"எனது நிலத்திற்குத் திரும்புவது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்," என்று கூறிய அவர் "எனது தாத்தா பாட்டிகளும் உறவினர்களும் இங்கே [வடக்கு இராக்கில்] இறந்துவிட்டார்கள்.
நான் மகிழ்ச்சியாக உணர வேண்டுமா அல்லது வருத்தப்பட வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் இந்த நாளைப் பார்க்க உண்மையிலேயே தகுதியானவர்கள் இப்போது இல்லை" என்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!