பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்...
28 Oct, 2026
புலனாய்வுத் தகவல்கள் கசிவு - டிரம்ப் விமர்சனம்
இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்த உளவுத்துறை மதிப்பீடு குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார்.
"போலி செய்தி சிஎன்என், தோல்வியுற்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன!" என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'தேசத்துரோகம்' என்று சாடும் டிரம்ப் சிறப்புத் தூதர்
இரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை "தேசத் துரோகம்" என்று மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.
"இது கொடியது, இது துரோகம். இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறினார்.
அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் "அழிக்கப்பட்டன" என்பதில் "சந்தேகமில்லை" என்றும் அவர் கூறினார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு விட்காஃப் அளித்த நேர்காணலின் ஒரு க்ளிப்பை இடுகையிட்டு அவரது கருத்துகளை டிரம்ப் எதிரொலித்தார்.
"ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது விதானத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது!" விட்காஃப் கூறியதாக டிரம்ப் மேற்கோள் காட்டினார்:
-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!