தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
ஆனால், விரைவிலேயே டச்சுக்காரர்களின் பார்வை காலி மீது திரும்பியது. 1640ஆம் ஆண்டு மார்ச் எட்டாம் தேதி காலி வளைகுடாவில் டச்சுப் படைகள் நுழைந்தன. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் காலி கோட்டையின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. முடிவில் 1640ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கோட்டை வீழ்ந்தது. இந்தக் கோட்டையைப் பிடிப்பதில் டச்சுப் படைகளுக்கு பெரும் உயிரிழப்பு ஏற்பட்டாலும்கூட, இலங்கையின் நறுமணப் பொருள் வர்த்தகத்தில் அவர்கள் ஆதிக்கம் செலுத்த இது வழிவகுத்தது. கோட்டையைக் கைப்பற்றிய பிறகு, மண்ணாலும் கட்டைகளாலும் கட்டப்பட்டிருந்த பகுதிகளை அகற்றிவிட்டு காலி தீபகற்பம் முழுவதையும் உள்ளடக்கி கல்லாலான ஒரு கோட்டையைக் கட்ட முடிவுசெய்தனர். சிங்களர்களின் உதவியுடன் விரைவிலேயே கோட்டை உருவாக்கப்பட்டது. இந்தக் கோட்டையின் பரப்பு மட்டும் சுமார் 52 ஹெக்டேர். இந்தக் கோட்டையைச் சுற்றி 18 கொத்தளங்களும் இருக்கின்றன. இந்தக் கோட்டையின் பெரும்பாலான சுவர் பகுதிகள் 1663வாக்கில் கட்டி முடிக்கப்பட்டன. கடலை ஒட்டிய பகுதியிலும் கோட்டைச் சுவர் கட்டி முடித்த பிறகு, 1729-ஆம் ஆண்டு வாக்கில் தற்போதைய நிலையை எட்டியது இந்தக் கோட்டை. 1775-ஆம் ஆண்டு வாக்கில் கோட்டைக்குள் ஒரு புரொட்டஸ்டண்ட் தேவாலயம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்ட பிறகு வெகுகாலம் கோட்டை டச்சுக்காரர்கள் வசம் இருக்கவில்லை. கொழும்பு பிரிட்டிஷாரிடம் வந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, 1796-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி காலி கோட்டையும் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்குப் பிறகு தென்னிலங்கையின் நிர்வாக மையமாகவே விளங்கியது காலி. பிரிட்டிஷார் வசமான காலி கோட்டை இந்தக் கோட்டை பிரிட்டிஷாரின் வசம் வந்த பிறகு, கோட்டைக்குள் புதிதாக பல இடங்கள் கட்டப்பட்டன. உதாரணமாக, கோட்டையைச் சுற்றியிருந்த அகழி நிரப்பப்பட்டது. புதிதாக இரும்பாலும் பிறகு சுண்ணாம்பாலும் கலங்கரை விளக்கம் ஒன்று கட்டப்பட்டது.தென்னிலங்கையின் நிர்வாக மையமாக விளங்கியது காலி
இந்தக் கோட்டைக்கு இரண்டு வாயில்கள் இருக்கின்றன. ஒன்று 1669-ஆம் ஆண்டில் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. இதை ஒட்டி ஒரு அகழியும் கீழே இறக்கி - ஏற்றும் வகையில் ஒரு பாலமும் இருந்தன. இந்த வாயிலுக்கு மேலே VOC (Vereenigde Oostindische Compagnie - டச்சு கிழக்கிந்தியக் கம்பனி) என்ற எழுத்துகளுடன் கூடிய முத்திரையும் இருந்தது. பிரிட்டிஷார் கோட்டையைக் கைப்பற்றியவுடன், இந்த முத்திரை கோட்டையின் உட்பக்கமாக மாற்றப்பட்டு, மூன்றாவது ஜார்ஜ் மன்னரின் முத்திரை பதிக்கப்பட்டது. கோட்டை பிரிட்டிஷார் வசம் வந்த பிறகு 1873-ஆம் ஆண்டில் புதிதாக ஒரு வாயில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த வாயிலே பிரதானமானதாக இருக்கிறது. இந்தக் கோட்டைக்குள் உள்ள கழிவுநீர் அகற்றும் வழிமுறை இப்போதும் வியக்கத்தக்கதாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, கடல் மட்டம் உயரும் போது, கடல் நீர் கழிவுநீர் கால்வாய்களுக்குள் புகுந்து அவற்றை அகற்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கோட்டைக்குள் மிகப்பெரிய நகரம் 19ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷார் கொழும்பு நகருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, நாட்டின் தலைநகராக மாற்ற ஆரம்பித்தனர். இதனால், விரைவிலேயே காலி கோட்டையின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது. "ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகச் சிறந்த கோட்டை நகரங்களில் காலியே சிறந்த உதாரணமாக இருக்கிறது" என யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. இந்தக் காரணம் உள்ளிட்ட மேலும் பல காரணங்களால், இந்தக் கோட்டை தற்போது யுனெஸ்கோ மரபுரிமைச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. கோட்டை கட்டப்பட்ட காலத்தில், கோட்டைக்குள்தான் பிரதானமான நகரம் அமைந்திருந்தது. தற்போதும் கோட்டைக்குள் பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், கடை வீதிகள், நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால், கோட்டைக்கு வெளியிலும் மிகப் பெரிய நகரம் இருக்கிறது.19ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷார் கொழும்பு நகருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, நாட்டின் தலைநகராக மாற்ற ஆரம்பித்தனர்
"இலங்கையில் உள்ள மிகப் பெரிய, விசாலமான கோட்டை இந்த காலி கோட்டைதான். உள்ளுக்குள்ளேயே 20க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. தற்போது உள்ள காலி நகரம் பிற்காலத்தில் உருவானது. அந்தக் காலத்தில் இருந்த காலி நகரம் என்பது கோட்டைக்குள் உள்ளே இருந்த நகரம்தான். இப்போதும் அது மிக சிறப்பான ஒரு நகரம்தான். காலி கோட்டைக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ள மிகப் பெரிய கோட்டை, யாழ்ப்பாணத்தில் உள்ள கோட்டைதான். ஆனால், அதன் பெரும் பகுதிகள் சிதைந்துவிட்டன. ஆனால், இந்தக் கோட்டை மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார் வரலாற்று ஆய்வாளரான என்.கே. திருச்செல்வம்.
இந்தக் கோட்டைக்குள் போர்ச்சுக்கீசியர் கால, டச்சுக்காரர் கால புதையல்கள் இருப்பதாக கதைகள் உண்டு. ஆனால், அப்படி எதுவும் இதுவரை கிடைத்ததில்லை.
போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என பல காலனியாதிக்க நாடுகளால் ஆளப்பட்ட இலங்கை, இந்த காலி கோட்டை தவிர, யாழ்ப்பாணக் கோட்டை, திருகோணமலையில் உள்ள ஃபிரெட்ரிக் கோட்டை, மட்டக்களப்புக் கோட்டை, மன்னாரில் உள்ள அரிப்புக் கோட்டை என பல கோட்டைப் பிரதேசங்களைக் கொண்டிருக்கிறது.
பிபிசி
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!