இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஒருவர் அடித்துக் கொலை!
குடாஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடவவெர பிரதேசத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
பன்னேகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு (04) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து குறித்த நபரை ஒருவர் தடியால் தாக்கியதில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 38 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!