news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரு சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; முதியவர் கைது

05 Nov, 2024
இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் முதியவர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (05) கைது செய்யப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் மஹரகம - எருவ்வல பிரதேசத்தில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் ஆவார். 10 மற்றும் 12 வயதுடைய இரு சிறுவர்களே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான இரு சிறுவர்களும் மஹரகம - எருவ்வல பிரதேசத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது அப்பிரதேசத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்ற சந்தேக நபர், இரு சிறுவர்களையும் ஏமாற்றி ஹொரணை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். பின்னர், சந்தேக நபர் இந்த இரு சிறுவர்களையும் மக்குலுதுவ பிரதேசத்தில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். பின்னர், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!