news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இரு லொாறிகள் மோதி விபத்து ; ஒருவர் பலி ; இருவர் காயம்

26 Feb, 2024
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ மற்றும் கொட்டாவைக்கு இடையிலான பகுதியில் இரு லொாறிகள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (26) அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் ரத்கம பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய லொறி சாரதியாவார். ரத்கம பிரதேசத்தில் இருந்து பேலியகொடை மீன் சந்தைக்கு மீன் கொள்வனவு செய்யவதற்காக பயணித்த லொாறி ஒன்று ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இருந்து குருணாகல் பிரதேசத்திற்கு சீமெந்து ஏற்றி கொழும்பு பிரதேசத்தை நோக்கி பயணித்த மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!