உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
பாண்டுரங் உல்பே
வீட்டில் பாண்டுரங் உல்பேவின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நிலையில், உறவினர்கள் அவரை ஆம்புலன்சில் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
உல்பே சென்ற ஆம்புலன்ஸ் சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கிய போது, பாண்டுரங்கின் உடல் கடுமையாக ஆட்டம் கண்டது. சிறிது நேரம் கழித்து, அவரது விரல்கள் அசைந்ததை பேரன் ஓம்கார் ரமணே கவனித்தார்.
தாத்தாவின் விரல்கள் அசைவதைக் கண்டவுடன், தன்னிடம் இருந்த ஆக்ஸிமீட்டரைக் கொண்டு அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவைச் சரிபார்த்ததாக ஓம்கார் கூறினார்.
அதன் பிறகு, தாத்தா உயிருடன் இருப்பதை உணர்ந்த அவர், உடனடியாக ஆம்புலன்ஸை கஸ்பா பவ்டாவில் உள்ள டி.ஒய்.பாட்டீல் மருத்துவமனைக்கு திருப்பினார்.
இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர், இதன் காரணமாக, டிசம்பர் 17 அன்று பிற்பகல் 3 மணியளவில் உல்பே சுயநினைவுக்கு திரும்பினார். அதன் பின்னர் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பூரண குணமடைந்து டிசம்பர் 30-ஆம் தேதி வீடு திரும்பினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீடு திரும்பிய பிறகு, அவரது வீடியோ மற்றும் இந்த சம்பவங்களின் முழுப் பின்னணி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
ஆனால், எந்த மருத்துவமனைக்கு அவரை முதலில் அழைத்துச் சென்றார்கள், எந்த மருத்துவர் அவர் இறந்துவிட்டார் எனக் கூறியது என்று எந்தத் தகவலையும் தெரிவிக்க குடும்பத்தினர் தயாராக இல்லை.
மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவர், இது அலட்சியத்தால் நிகழ்ந்த சம்பவம் என்று கூறினார்.
சிவில் சர்ஜன் என்ன சொன்னார்?
பாண்டுரங் உல்பே
பாண்டுரங் உல்பேவுக்கு என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள, பிபிசி மராத்தி கோலாப்பூர் மாவட்ட சுகாதார சேவைகள் பிரிவு தலைவரான மருத்துவர் சுப்ரியா தேஷ்முக்கிடம் பேசியது. இது தொடர்பாக பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினரிடம் தகவல் கேட்டுள்ளதாக அவர் கூறினார்.
"பாண்டுரங் உல்பேவின் ஈசிஜியில் நேர் கோடு தோன்றியதை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்ததாக ஓம்கார் ரமணே எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார்.
இருப்பினும், விதிகளின்படி, அவ்வாறு நேர் கோடு தோன்றியதுமே எந்த நோயாளியும் உடனடியாக இறந்ததாக அறிவிக்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். "ஒரு மணி நேரத்திற்குப் பிறகே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படும். அதுவரை நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டெடுக்க பல்வேறு அவசர சிகிச்சைகள் அளிக்கப்படுவது வழக்கம் "என்றும் அவர் கூறினார்.
"முதியவர் விஷயத்தில் இப்படி எதுவும் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு, ஆம்புலன்சில் உறவினர்களிடம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்" என்று மருத்துவர் தேஷ்முக் கூறினார்.
இதில் சம்பந்தப்பட்ட மருத்துவரின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த தேஷ்முக்,"சம்பந்தப்பட்ட மருத்துவர் இரண்டு முக்கிய தவறுகளை செய்துள்ளார். முதல் தவறு, இதயம் துடிப்பதை கவனிக்காமல் நோயாளி இறந்துவிட்டதாக உடனடியாக அறிவித்தது, இரண்டாவது தவறு, பிரேத பரிசோதனை செய்யாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்தது."
"இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை அவசியம் என்று கூறிய மருத்துவர் தேஷ்முக், இறப்புச் சான்றிதழை வழங்காமல் இதயம் துடிக்கவில்லை என்று வெறுமனே கூறி பாண்டுரங் உல்பேவை வீட்டுக்கு அனுப்பியது பெரிய தவறு" என்று தெரிவித்தார்.
இறந்ததாக கருதப்பட்ட முதியவர் உயிர் பிழைத்தது எப்படி?
அப்படியானால், பாண்டுரங் உல்பே எப்படி சுயநினைவுக்கு வந்தார் என்று மருத்துவர் தேஷ்முக்கிடமும் கேட்டோம்.
"மாரடைப்புக்குப் பிறகு, இதயம் திடீரென நின்றுவிடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இதயத்தை மீண்டும் செயல்பட வைக்க, நோயாளிக்கு இதய மசாஜ் அல்லது இதயத்தில் ஊசி செலுத்தப்படும். ஆம்புலன்ஸ் வேகத்தடையின் மேல் ஏறிய போது பாண்டுரங் உல்பேவின் உடல் ஒரு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி அவரது இதயத்தை செயல்பட செய்திருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பாண்டுரங் உல்பே இறந்துவிட்டதாக அறிவித்த மருத்துவரோ, சம்பந்தப்பட்ட மருத்துவமனையோ இந்த விவகாரம் குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்த மருத்துவமனையின் பெயரை தெரிவிக்க பாண்டுரங் உல்பேவின் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
குடும்பத்தின் மூத்தவர் மரணப் படுக்கையில் இருந்து மீண்டு வந்திருப்பது அந்த குடும்பத்திற்கு ஒரு அதிசயமான நிகழ்வு.
ஆனால் வேகத்தடை மீது ஆம்புலன்ஸ் ஏறாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வியும் உள்ளது. எனவே 'அந்த' மருத்துவரின் அலட்சியம், குடும்பத்தினருக்கு பெரிய சோகத்தை கொடுத்திருக்கும்.
-இது பிபிசி செய்தி-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!