'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
Farooqi
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி அடுத்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட, இலங்கை அணி நல்ல டோட்டலை நோக்கி நகர்ந்தது.
சிறப்பாக செயல்பட்ட இந்த ஜோடியை அடுத்தடுத்த ஓவர்களில் குஷாலை 39 ரன்னிலும், சமரவிக்ரமாவை 36 ரன்னிலும் தொடர்ச்சியாக வெளியேறிய முஜீப் ஆப்கானிஸ்தான் அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார்.
139 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை தடுமாற, அதற்கு பிறகு பந்துவீச வந்த ஃபாருக்கீ இலங்கை அணியை எழவே விடாமல் அடிக்கு மேல் அடி கொடுத்தார்.
அடுத்து வந்த எந்த வீரர்களையும் நிற்கவே விடாமல் அடுத்தடுத்து வெளியேற்றிய ஃபாரூக்கி, 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தின். ஃபாருக்கின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாத இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களை மட்டுமே எடுத்தது.
3 வீரர்கள் அரைசதம்! நினைத்ததை செய்துகாட்டிய ஆப்கானிஸ்தான்!
242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு, சிறப்பான ஃபார்மில் இருக்கும் மதுஷங்கா முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.
நல்ல ஃபார்மில் இருக்கும் குர்பாஸ் 0 ரன்னில் வெளியேறினாலும், தங்கள் திட்டத்தில் சரியாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் அடுத்து நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
2வது விக்கெட்டுக்கு ஷத்ரான் மற்றும் ரஹ்மத் ஷா ஜோடி 73 ரன்கள் சேர்க்க அடுத்த விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை அணி தடுமாறியது. விக்கெட்டை நோக்கி மீண்டும் பந்துவீச வந்த மதுஷங்கா 39 ரன்னில் நிலைத்து நின்ற ஷத்ரானை வெளியேற்றி அசத்தினார்.
Sl vs Afg
ஆனால் என்ன தான் மதுஷங்கா சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற எந்த இலங்கை வீரர்களும் ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கான பவுலிங்கை வெளிப்படுத்தவில்லை.
உடன் இலங்கை அணி மோசமான கிரவுண்ட் ஃபீல்டிங்கும் செய்ய, சிறப்பாக செயல்பட்ட ரஹ்மத் ஷா மற்றும் கேப்டன் ஷாகிதி இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்து அசத்த ஆப்கானீஸ்தான் அணி கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்தது.
ரஹ்மத் ஷா 62 ரன்னில் வெளியேற இறுதியாக களத்திற்கு வந்த அஸ்மதுல்லா ஓமர்ஷாய் சிக்சர் பவுண்டரிகாக பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.
6 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என துவம்சம் செய்த ஓமர்ஷாய் 73 ரன்கள் அடித்து அசத்த, 45.2 ஓவர்களில் இலக்கை எட்டிய ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இலக்கை துரத்த ஆப்கானிஸ்தான் வகுத்த திட்டம்! போட்டியின் இடையே பத்து-பத்து ஓவர்களாக இலக்கை எப்படி துரத்துவது, குறிப்பிட்ட இடைவெளியில் எவ்வளவு ரன்கள் அடிப்பது என முன்கூட்டியே திட்டம் வகுத்த ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டது. ஆப்கானிஸ்தான் திட்டம் வகுத்த ரன்களின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றுவருகிறது. அவர்கள் குர்பாஸை விரைவாகவே இழந்தாலும் பயப்படவில்லை, மாறாக அவர்களுடைய திட்டத்தில் திடமாக செயல்பட்டனர். பல முன்னாள் சாம்பியன் அணிகள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு மற்ற சிறிய அணிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியுள்ளது.Afghanistan has strategically broken down the target into fragments, and Coach Jonathon Trott is outlining the plan on the whiteboard to achieve it by the 48th over. 👌👌#Afghanistan #AFGvsSL pic.twitter.com/ud2hDj2uC3
— Zaryab Khan (@ZaryabMmd) October 30, 2023
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!