திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது - என்ன காரணம்? பின்னணி
26 Oct, 2026
வேலு பாப்பானியை 'இலங்கையின் மூத்த தாய்' எனக் குறிப்பிட்டு, 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 01ஆம் தேதி - சர்வதேச முதியோர் தினத்தன்று, அவருக்கு சான்றிதழொன்று வழங்கப்பட்டது. அதில் முதியோருக்கான தேசிய சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
வேலு பாப்பானி
இவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் பிபிசி சிங்கள சேவை, இவர் தொடர்பில் வீடியோ கதை ஒன்றினைய தயாரித்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த வீடியோவில் வேலு பாப்பானியை கவனித்து வந்த மஹலெச்சுமி எனும் பெண், அவர் குறித்து பேசியிருந்தார்.
"நான் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து இந்த ஆச்சியம்மா (பாட்டி) பக்கத்து வீட்டில்தான் இருக்கிறார். எனது மகனை சிறிய வயதிலிருந்து இந்த ஆச்சியம்மாதான் துாக்கி வளர்த்தார். நான் வெளிநாடு சென்ற பின்னரும் எனது பிள்ளையை இவர்தான் கவனித்தார்.
இப்போது எனது மகன் வளர்ந்து ஒரு பிள்ளையின் தந்தையாகி விட்டார். 'ஆச்சியம்மாவை மரணம் வரைக்கும் நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்று, எனது மகன் சொல்கிறார்" என, பாப்பானியை கவனித்து வந்த பெண் கூறியிருந்தார்.
இப்போது வேலு பாப்பானி நம்மிடையே இல்லை. இலங்கை தனது மூத்த பிரஜை ஒருவரை இழந்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!