news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கோடி ரூபா பெறுமதியான 9 கிலோ தங்கம் இந்தியாவில் பறிமுதல்! (வீடியோ)

12 Dec, 2020
                                                                                 மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட 9 கிலோ தங்கத்தை இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் இன்று வெள்ளிக்கிழமை (11) கைப்பற்றியதுடன் கடத்தலில் ஈடுபட்ட ஐவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் தமிழகத்தின் மண்டபத்தையடுத்த மன்னார் வளைகுடா மணாலி தீவுக்கு அருகே படகு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இரவு தகவல் கிடைத்தது.   இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை(11) அதிகாலை முதல் மண்டபம் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ரோந்து கப்பலில் கடற்படை வீரர்கள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இணைந்து மணாலி தீவு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த படகில் சந்தேகத்துக்கிடமான முறையில் காணப்பட்ட இருவரை கைது செய்தனர். அவர்கள் இருவரும் தங்கக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மண்டபம் மரைக்காயர்பட்டினத்தை சேர்ந்த பையஸ் அகமத், முகமது பாரூக் ஆகியோர்  என தெரிந்தது. இவர்கள் இருவரையும் பிடிக்க முற்பட்டபோது அருகில் மற்றொரு படகிலிருந்த முகமது ரசாக், ஜாஸ் அகமத்,ஜெயனுல் பயாஷா ஆகிய மூவரும் இவர்களை தப்பி செல்ல உதவியுள்ளனர். இதனையடுத்து கடலோரா காவல் படை நெருங்கி வருவதை அறிந்த கடத்தல்காரர்கள் தங்கத்தை கடலில் வீச முயற்சித்தபோது அவர்களில் ஐவரைக் கைது செய்த இரண்டு படகுகள் மற்றும் 9 கிலோ 700 கிராம் தங்கத்தையும் கைப்பற்றி விசாரணைக்காக மண்டபம் கடலோர கால் படை முகாமுக்கு அழைத்துச் சென்றனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் இலங்கையிலிருந்து கடத்தி வந்த தங்கத்தை மணாலி தீவு பகுதியில் மறைத்து வைத்து விட்டு கடலோர காவல் படை ரோந்து கப்பல் சென்றவுடன் மண்டபம் மரைக்காயர்பட்டிணம் கடற்கரைக்கு எடுத்துச் செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, இலங்கையிலிருந்து கடத்தல்காரர்கள் யாரும் தங்கத்தை கொண்டு வந்து இவர்களிடம் கொடுக்கும்போது கடலோர காவல் படையின் ரோந்து படகு வருவதை கண்டு மணாலி தீவு பகுதிகளில் மறைந்துள்ளனரா என இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர்கிராப்ட் (தண்ணீர் மற்றும் நிலத்தில் செல்வது) ரோந்து கப்பல் மூலம் தீவு முழுவதும் தேடி வருகின்றனர். நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ 700 கிராம் தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ 4.5 கோடி என கூறப்படுகிறது. வீடியோ

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!