சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
இவ்வாறான பின்னணியில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 269 தொற்றாளர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்றும் 10 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி தற்போதும், 166 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 146 ஆம் தோட்டத்தில் வசிக்கும் 59 வயதான பெண் ஒருவர் , இந்தியாவுக்கு யாத்திரை சென்றுவிட்டு திரும்பி 33 நாட்களின் பின்னர் கொரோனா தொற்றுக்கு உஉள்ளாகியமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அவரது மகன்மார் உள்ளிட்டோருக்கும் கொரோனா இருப்பது பி.சி.ஆர். பரிசோதனைகளில் தெரியவந்தது.
இதனையடுத்து பண்டாரநாயக்க மாவத்தையின் 146 ஆம் தோட்டம் வரையிலான பகுதி முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்ப்ட்டது. இந்நிலையில் அங்கிருந்த பலரும் வெலிசறை வைத்தியசாலை உட்பட சில தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பட்டனர்.
ஏனையோர், முடக்கப்பட்ட பண்டாரநாயக்க மாவத்தை பகுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் முடக்கப்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டோரிடம் பி.சி.ஆர். பரிசோதனைக்கான சளி மாதிரிகள் நேற்று பெறப்பட்ட நிலையில், அதன் பெறுபேறுகள் இன்று மாலை கிடைத்தது. அதன்படி அவர்களில் 15 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களது தொடர்பாடல் வட்டத்தை ஆராய்ந்த பாதுகாப்புத் தரப்பினர், அந்த வட்டத்தை முழு பண்டாரநாயக்க மாவத்தையிலும் விரிவுபடுத்தியுள்ள நிலையில் அப்பகுதியை முழுமையாக முடக்கினர்.
அத்துடன் அங்கிருந்தோர் பலரை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு இராணுவம் கடற்படையினர், பொலிஸாரின் தலையீட்டுடன் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்புத் தரப்பினர் அழைத்துச் சென்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!