news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு 900ஐ கடந்தது

14 May, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது.கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 108 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன், 445 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!