news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு

16 May, 2022
இலங்கையில் இன்று இரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது. கடந்த 9ம் தேதி ஏற்பட்ட வன்முறை சம்பவத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் அன்று முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு நேற்று அதிகாலை வரை அமலில் இருந்தது. எனினும், நேற்றைய தினம் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத நிலையில், இன்றிரவு மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!