இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
இந்த நிலையில், எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை உரிய நேரத்தில் இலங்கை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கதேசம் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தலுக்தர், அந்த நாட்டு ஊடகமொன்றிற்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் வருடாந்த கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டிருந்த நிலையிலேயே, இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கும், பங்களதேஷ் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, வங்கதேசத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை, உரிய நேரத்தில் இலங்கையினால் வழங்க முடியவில்லை. இந்த நிலையில், குறித்த கடனை செலுத்தும் கால எல்லையை வங்கதேசம் நீடிப்பதற்கு இணக்கம் வெளியிட்டிருந்தது. இதன்படி, எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் இந்த கடனை செலுத்துவதற்கு இலங்கை இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்த இணக்கப்பாட்டிற்கு அமைய, இலங்கை உரிய நேரத்தில் கடனை செலுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக வங்கதேச மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். பொருளியல் நிபுணரின் பார்வை சீனா, கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவிக்கும் சாத்தியம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்Met with Mr. William Roos, Co-Chairman of the Paris Club during the IMF/World Bank Annual Meetings. Mr. Roos assured The Paris Club’s fullest support for Sri Lanka’s ongoing efforts to find an early resolution to its debt crisis. pic.twitter.com/3l0ZMElv34
— Shehan Semasinghe (@ShehanSema) October 17, 2022
பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன்
''ஜெனீவாவில் இலங்கையின் பொருளாதார பிரச்னை தொடர்பில் இம்முறை பேசப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச ரீதியாக இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் முன்வைக்கப்பட்டு, அதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளமையினால், அதற்கு சீனாவும் ஆதரவு தெரிவிக்கும். கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதையே இலங்கை எதிர்பார்க்கின்றது.
அது பெரும்பாலும் சாத்தியமாகும். இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவி வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளின் கோரிக்கைக்கு அமைய, சீனா இதற்கு இணக்கம் தெரிவிக்கும். அதில் பிரச்னை ஏற்படாது." என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள கடனை அடிப்படையாகக் கொண்டே, வங்கதேசம் தமது கடனை உரிய நேரத்தில் திரும்பி செலுத்துமாறு கோரியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
''இலங்கை இதுவரை பெற்றுக்கொண்டுள்ள கடன்களில் வங்கதேசத்திடம் பெற்றுக்கொண்ட கடனானது, மிகவும் குறைவான கடன் தான். இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான கடன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் ஒரு தொகுதி கடன் கிடைக்கவுள்ளது.
அந்த கடன் வழங்கப்படுமாக இருந்தால், அதிலிருந்து தங்களுக்கு காணப்படுகின்ற பிரச்சினையை தீர்க்குமாறு வங்கதேசம் எதிர்பார்க்கின்றது.
சர்வதேச நாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்டு, மீள் செலுத்த முடியாதுள்ள கடன்களின் பெருந் தொகையை செலுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் கடன் தொகை உதவி அளிக்கும்," என பொருளாதார நிபுணரும், பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!