news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை தம்பதி அவுஸ்ரேலியாவில் சடலமாக மீட்பு !

13 Mar, 2024
அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!