மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
பெட்ரோலுக்காக காத்திருக்கும் வாகனங்கள்
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் நாங்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னைகள் காணப்படுகின்றன.
எதிர்வரும் சில தினங்களில் வரிசைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வரை தேட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
எம் வசம் தற்போது ஒரு நாளுக்கு போதுமான பெட்ரோல் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. நேற்றைய தினம் நாட்டிற்கு வந்த டீசல் கப்பலினால், டீசல் பிரச்னைக்கு ஒரு வகையில் சிறிய தீர்வொன்று தற்போது கிடைத்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் மே 19ம் தேதி முதல் ஜுன் முதலாம் தேதி வரையான காலப் பகுதிக்குள் மேலும் 2 டீசலை ஏற்றிய கப்பல்களும், மே மாதம் 18 மற்றும் மே 29ம் தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வருகைத் தரவுள்ளன.
கடந்த 40 நாட்களுக்கு அதிகமாக இலங்கை கடற்பரப்பில் பெட்ரோல், மசகு எண்ணெய், உராய்வு எண்ணெய் ஏற்றிய மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
அதற்கான நிதியை செலுத்துவதற்கு திறந்த சந்தையிலிருந்து டாலரை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மின் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை உற்பத்தி செய்ய எரிபொருள் பயன்படுத்தப்படுகின்றது.
இதனால், நாளாந்த மின்வெட்டு எதிர்வரும் நாட்களில் 15 மணிநேரம் வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனினும், நாங்கள் இதற்கு தேவையான நிதியை தேடியுள்ளோம். ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோருக்கு எரிவாயுவை பெற்றுக்கொடுப்பதற்காக 20 மில்லியன் அமெரிக்க டாலர் மிக விரைவில் தேடிக் கொள்ள வேண்டியுள்ளது.
மண்ணெண்ணை மற்றும் மசகு எண்ணெய் தொடர்பிலான நிலைமை இதை விடவும் மோசமாக காணப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மத்திய வங்கி, அரச, தனியார், இலங்கையிலுள்ள வெளிநாட்டு வங்கிகள் டொலர் இல்லாமையினால், அந்த பிரச்னைகளை தற்போது எதிர்நோக்கியுள்ளன.
எம்வசம் மிகவும் குறைவான டாலரே கையிருப்பில் உள்ளமையை நீங்களும் அறிவீர்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில், நாங்கள் நேற்றைய தினம் டீசலுடனான கப்பலொன்றை கொண்டு வந்துள்ளோம். அதனால், இன்று முதல் டீசலை பெற்றுக்கொள்ள உங்களுக்கு முடியும்.
இதற்காக இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு கிடைத்தது. அதேபோன்று செவ்வாய்கிழமைக்கு முன்பாக எரிவாயுடனான கப்பலுக்கு நாங்கள் பணத்தை செலுத்த நடவடிக்கை எடுப்போம். அதனூடாக எரிவாயு பிரச்சினைக்கு சிறியதொரு தீர்வு கிடைக்கும்.
அதேபோன்று, மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது. இருத நோயாளர்களுக்கு தேவையான மருந்து வகைகள், சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட பெருமளவிலான மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
மருந்து, சத்திர சிகிச்சை உபகரணங்கள், நோயாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் விநியோகத்தர்களுக்கு 4 மாதங்களாக கடனை செலுத்தவில்லை.இவர்களுக்கு 34 பில்லியன் ரூபா நிலுகை தொகையாக செலுத்த வேண்டியுள்ளது.
அதேபோன்று, அரச மருந்தாக்கல் கூட்டுதாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து வகைகளுக்கு கடந்த 4 மாதங்களாக கடன்தொகை செலுத்தப்படவில்லை.
அதனால், மருந்தாக்கல் கூட்டுதாபனத்தை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க, சர்வதேச மருந்து விநியோக நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அத்தியாவசியமான 14 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். இந்த மருந்து வகைகளை விநியோகிப்பதற்கு எமது மருந்து விநியோக பிரிவிற்கு தற்போது முடியாதுள்ளது.
இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து உள்ளிட்ட இரண்டு வகையான மருந்துகளை விநியோகிக்கவே முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
2022ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி வரவு செலவுத்திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவுத்திட்டமொன்றை சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதனை நிவாரண வரவு செலவுத்திட்டமாக முன்வைப்பதே எமது எதிர்பார்ப்பாக காணப்படுகின்றது.
அதேபோன்று தற்போது கடும் நட்டத்தில் இயங்கி வரும் இலங்கை விமான சேவையை தனியார் மயப்படுத்துவதற்கு நான் யோசனையொன்றை முன்வைக்கின்றேன்
2021ம் ஆண்டில் மட்டும் இலங்கை விமான சேவைக்கு 45 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் இருந்து 2021 மார்ச் 31ம் தேதி வரை இலங்கை அரசுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள நட்டமானது 372 பில்லியன் ரூபாவாகும்.
நாங்கள் இந்த நிறுவனத்தை தனியார் மயப்படுத்தினாலும், அந்த நட்டத்தை நாமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
வாழ்க்கையில் ஒரு தடவையேனும் விமானத்தில் கால் தடம் பதிக்காத இந்த நாட்டில் வாழ்கின்ற வறுமை கோட்டிற்கு கீழுள்ள அப்பாவி மக்களுக்கும் இந்த நட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது
இதை விடவும் மோசமான நிலைமையை நான் குறுகிய காலத்திற்கு சந்திக்க வேண்டியுள்ளது.
பணவீக்கம் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 84.38 சதமும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் ஒரு லீட்டருக்கு 71.19 சதமும், ஒரு லீட்டர் டீசலுக்கு 131.55 சதமும், ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 136.31 சதமும், ஒரு லீட்டர் மண்ணெண்ணைக்கு 294.50 சதமும் நட்டத்தை அரசாங்கம் தற்போது எதிர்நோக்கி வருகின்றது.
பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு இந்த நட்டத்தை தொடர்ந்தும் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான இயலுமை கிடையாது. அதேபோன்று, மின்சார சபை, ஒரு அலகு மின்சாரத்திற்கு உங்களிடமிருந்து 17 ரூபா வசூலிக்கவிட்டாலும், அதற்காக 48 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!